சமூக ஊடகங்களை சரியான வழியில் பயன்படுத்தினால் அது பலரின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் ஒரு நிகழ்வு எல்லோருக்கும் உணர்த்தியுள்ளது.

பலரின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் சமூக ஊடகங்கள் ஒரு உண்மை நிகழ்வு !
பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீமா மான்ஜி. சிறுமியான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்துள்ளார்.

இருப்பினும் இந்த சம்பவம் இவரை வீட்டோடு முடக்கிடவில்லை. கல்வி மீது கொண்ட ஆர்வத்தாலும், தன்நம்பிக்கையாலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ஒரு காலில் குதித்துக் குதித்து தினமும் சென்று வந்தார்.

இவர் இப்படி பள்ளிக்கு செல்லும் வீடியோ ஒன்று அண்மையில் வைரலானிது. 

இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் மாணவி சீமாவுக்கு பீகார் மாநில அரசு உதவி முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து அம்மாநில அரசு மாணவி சீமா எவ்வித சிரமமும் இல்லாமல் பள்ளி சென்று வரும் வகையில் அவருக்குச் செயற்கை கால் பொருத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து உடனே மாணவி சீமா மான்ஜிக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து புதிய செயற்கை காலுடன் மாணவி சீமா நிற்கும் புகைப்படத்தை ஐஏஎஸ் அலுவலர் அவானிஷ் சரண் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

விப்பிள் நோய் என்பதும் அதன் அறிகுறிகளையும் காணலாம் !

இதையடுத்து சிறுமி சீமாவின் புகைப்படம் இணையத்தில் வரலாகி வருகிறது. மேலும் செயற்கை கால் கிடைக்க உதவியாக இருந்த அனைவருக்கும் மாணவி சீமா நன்றி தெரிவித்துள்ளார்.