ரஷ்யர்களால் விஷம் அளிக்கப்பட்ட கோடீஸ்வரர் கேட்ட கேள்வி !

0

உக்ரைனுக்கு ஆதரவாக சமாதானப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட ரஷ்ய கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிக் தமக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யர்களால் விஷம் அளிக்கப்பட்ட கோடீஸ்வரர் கேட்ட கேள்வி !
பிரித்தானிய கால்பந்து அணியான செல்சியின் உரிமையாளரும் ரஷ்ய கோடீஸ்வரருமான ரோமன் அப்ரமோவிக் கடந்த மாதம் ரஷ்ய உளவாளிகளால் விஷம் அளிக்கப்பட்டு, உயிர் தப்பியுள்ளார்.

அவருக்கு முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட கொடிய விஷம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பல மணி நேரம் கண் பார்வை இழந்து, அவரது கைகள் மற்றும் முகத்தில் தோல் உரிக்கப்பட்டது போன்ற நிலையில் அவதிப்பட்டுள்ளார்.

சாலையில் சென்ற கார் மீது ஏறிய ராணுவ டாங்கி... வீடியோ !

அப்ரமோவிக் மட்டுமின்றி, உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் சம்பவத்தன்று விஷம் அளிக்கப்பட்டது. 

குறித்த தாக்குதல் சம்பவமானது ரஷ்யாவில் உள்ள கடும்போக்குவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது,

அவர்கள் சமாதானப் பேச்சு வார்த்தைகளை சீர்குலைக்க விரும்புகிறார்கள் எனவும் உக்ரைனுக்கு எதிரான விளாடிமிர் புடினின் இந்த கொடூரப் போரைத் தொடர விரும்புகிறார்கள் என்றே கூறப்படுகிறது.

பாய்சன் தாக்குதலுக்கு இலக்கான ரோமன் அப்ரமோவிக் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், சிறப்பு குழுவினரிடம், நாங்கள் சாகப் போகிறோமா என கேள்வி எழுப்பியதாக தெரிய வந்துள்ளது.

சுவையான மேங்கோ மலாய் கேக் செய்வது எப்படி?

ரோமன் அப்ரமோவிக் கலந்து கொண்ட சமாதானப் பேச்சு வார்த்தையானது உக்ரைன் தலைநகரிலேயே ரஷ்ய குழுவினருடன் நடந்துள்ளது. 

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கியில் இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையில் அப்ரமோவிக் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)