சாலையில் சென்ற கார் மீது ஏறிய ராணுவ டாங்கி... வீடியோ !

0

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சாலையில் சென்ற கார் மீது ஏறிய ராணுவ டாங்கி... வீடியோ !
உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதே போல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 

இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்-வில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது ராணுவ டாங்கி ஏறிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி?

ராணுவ டாங்கி உக்ரைனை சேர்ந்ததா? அல்லது ரஷியாவை சேர்ந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை. சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது எதிரே வந்த ராணுவ டாங்கி வேகமாக மோதியது. 

இதில், ராணுவ டாங்கிக்கு அடியில் கார் சிக்கிக் கொண்டது. காரை ஓட்டி வந்த முதியவரும் அதில் சிக்கிக் கொண்டார். 

அதன் பின்னர், சில வினாடிகள் கழித்து ராணுவ டாங்கி காரில் இருந்து கிழே இறங்கி முன்னேறி சென்றது. 

சாலையில் சென்ற கார் மீது ஏறிய ராணுவ டாங்கி... வீடியோ !

இதையடுத்து, அங்கு நின்று கொண்டிருந்த மக்களில் சிலர் சிதைந்த காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ராணுவ டாங்கி ஏறியதில் கார் உருகுலைந்த போதும் காரில் இருந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். 

ஆரோக்கியம் நிறைந்த கடலை மாவு அடை செய்வது எப்படி?

ராணுவ டாங்கி கார் மீது ஏறுவதும், காரில் சிக்கிய முதியவரை மீட்கும் வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)