பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரயிலில் பயணம் செய்ய முடியுமா?

0

தற்போது ரயில் பயணம் என்பது மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. புறநகரிலிருந்து நகரத்திற்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரயிலில் பயணம் செய்ய முடியுமா?
புறநகர் ரயிலின் முக்கியத்துவத்தை அதின் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். 

பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள குறியீட்டு எண்கள் குறிப்பது என்ன? #PETBOTTLE

நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் அல்லது சாதாரண டிக்கெட் என்று எதாவது ஒரு டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு தான் உங்கள் ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும். 

இதே போல், உங்கள் கையில் பிளாட்பாரம் டிக்கெட்டை மட்டும் வைத்துக் கொண்டு நீங்கள் ரயில் பயணம் மேற்கொள்ள முடியுமா? என்றால் முடியும் என்றே சொல்லலாம். 

ஆம், பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்துப் பயணிக்கலாம். பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரம் சேவையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பலரும் நினைக்கின்றனர். 

பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரயிலில் பயணம் செய்ய முடியுமா?

ஆனால், அவசர நேரத்தில், முன்பதிவு டிக்கெட் அல்லது சாதாரணமான ரயில் டிக்கெட் எதுவும் எடுக்க நேரம் இல்லாத பயணிகள், 

வெறும் பிளாட்பாரம் டிக்கெட்டை மட்டும் வைத்துக் கொண்டு உங்கள் ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம். 

இதற்கென்று சில நிபந்தனைகள் உள்ளது, அதைப் பற்றிப் பார்க்கலாம். பிளாட்பாரம் டிக்கெட்டை மட்டும் வைத்துக் கொண்டு ரயிலில் ஏறலாம். 

பின்னர் நீங்கள் செல்லும் இடத்திற்கான டிக்கெட்டை ஓடும் ரயிலிலேயே வாங்கிக் கொள்ளலாம். 

ஆட்டிஸம் என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடே ! #Autism

பொதுவாக ரயிலில் பயணம் செய்யப் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு டிக்கெட்டை பெற, நீங்கள் முன்பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. 

டிக்கெட்டுகளை முன்பதிவு சாளரம் அல்லது ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். ஆனால் கடைசி நிமிடத்தில் நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தால் என்ன செய்வது?

பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரயிலில் பயணம் செய்ய முடியுமா?

நீங்கள் தாராளமான வெறும் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் ரயிலில் ஏறலாம், பின்னர் ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் சென்று உங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை அவரிடமிருந்து எளிதாகப் பெறலாம்.

பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் ரயிலில் ஏறும் நபர் உடனடியாக ரயிலில் இருக்கும் டிக்கெட் பரிசோதகரான TTE ஐ நேரில் தொடர்பு கொண்டு, 

அவரிடம் உங்கள் காரணத்தைச் சொல்லி, நீங்கள் சென்று சேருமிடத்திற்கான தற்போதைய டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். 

இந்த முறைப்படி நீங்கள் பயணிக்க முடிவு செய்வதற்கு முன் இது தொடர்பான சில விதிகளை அறிந்து கொள்ளுங்கள். 

இந்த முறையில் நீங்கள் டிக்கெட் வாங்கி பயணிக்கும் போது ரிசர்வேஷன் பெட்டிகளில் காலி இருக்கைகள் இருந்தால், அந்த இருக்கைகள் உங்களுக்கு வழங்கப்படும். 

பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரயிலில் பயணம் செய்ய முடியுமா?

அதற்கான கட்டணம் உங்களிடம் வசூலிக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை பெட்டிகளில் சில நேரங்களில் முழு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளும், 

முழுமையாக நிரம்பி இருக்கும் போது, உங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையை TTE-யால் வழங்க முடியாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா செய்வது எப்படி?

ஆனால், நீங்கள் முன்பதிவு இருக்கை கொண்ட பெட்டிகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவீர்கள். 

முன்பதிவு செய்யவில்லை என்றால், சேருமிட டிக்கெட்டின் விலையுடன் சேர்த்து உங்களிடம் இருந்து சுமார் ரூ. 250 அபராதமாக வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.

பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரயிலில் பயணம் செய்ய முடியுமா?

நீங்கள் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிய நிலையத்திலிருந்து, நீங்கள் சென்று சேருமிடத்திற்கான கட்டணமும் அபராத தொகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும். 

நடைமேடை டிக்கெட் பயணிகளுக்கு ரயிலில் ஏறுவதற்கான உரிமையை IRCTC முழுமையாக அனுமதி வழங்குகிறது. 

பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் மற்றொரு நன்மை என்னவென்றால், பயணிகளின் கட்டணம் அவர் அல்லது 

அவள் பிளாட்பார்ம் டிக்கெட்டை எந்த நிலையத்திலிருந்து வாங்கினார் என்பதைத் தீர்மானிப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. 

பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரயிலில் பயணம் செய்ய முடியுமா?

கட்டணம் வசூலிக்கும் போது நீங்கள் எந்த நிலையத்தில் இருந்து பிளாட்பாரம் டிக்கெட்டை வாங்கியுளீர்கள் என்று நிலையம் சரி பார்க்கப்படும்.

இந்த முறையில் 1AC, 2AC, 3AC போன்ற வகுப்புகளிலும் உங்களின் பயணத்தை மேற்கொள்ளலாம். அதற்கான கட்டணம் வேறுபடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

பீட்ஸா தோசை செய்வது எப்படி?

AC வகுப்புகளில் காலி இருக்கைகள் இருந்தால் TTE உங்களுக்கு அந்த இருக்கைகளுக்கான கட்டணத்தை வசூலிப்பார். MOBILE பயன்பாட்டில் UTS (Unreserved Ticketing System) இன் வசதி மூலமும் டிக்கெட் பெறலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings