பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள குறியீட்டு எண்கள் குறிப்பது என்ன? #PETBOTTLE

மளிகைக் கடை முதல் கம்ப்யூட்டர் நிறுவனம் வரை பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் தவிர்க்க இயலாததாகி விட்டது.
பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள குறியீட்டு எண்கள் குறிப்பது என்ன?
பிளாஸ்டிக் தயாரிப்புகளை இன்றைய நிலையில் முற்றிலுமாகத் தவிர்ப்பது இயலாது. பிளாஸ்டிக் ஒன்றும் உயிரை அச்சுறுத்தும் உயிர்க் கொல்லியல்ல. 

இன்னும் சொல்லப் போனால் எங்கும் நீக்கமற நிறைந்து, எளியவர்களின் கைக்கெட்டும் சிக்கனப் பொருள்.

வேண்டு மானால் இதன் விளைவைப் பற்றி விழிப்புணர்வு செய்து மக்கும் தன்மை அற்றவற்றை தடை செய்யலாம்.

பிளாஸ்டிக் பொருள்களால் உயிர் வாழ்க்கைக்கு ஏற்படும் அபாயங்களை எடுத்துக் காட்டி மக்களுக்கு புரிய வைக்கும் வகையில், 

விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கம் அங்கங்கு நடத்தி மக்களிடையே பிளாஸ்டிக் பயன் பாட்டைக் குறைக்கலாம்.

பிளாஸ்டிக் குறியீட்டு எண்களும் அதன் விளக்கமும் பற்றி காண்போம்.
பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள குறியீட்டு எண்கள் குறிப்பது என்ன? #PETBOTTLE
நாம் வாங்கும் எந்த பிளாஸ்டிக் பைகள் அல்லது டப்பாக்கள் அல்லது பாட்டில்கள் அல்லது எந்த பொருட்களிலும் அதனடியிலோ அல்லது 

ஏதாவது ஒரு இடத்திலோ ஒரு முக்கோண வடிவமும் அதனுள்ளே ஒன்று முதல் ஏழு வரை ஆன ஏதாவது ஒரு எண்ணோ அச்சிடப்பட்டு இருக்கும்.

அதன் விளக்கம் கீழ்கண்டவாறு.....

எண் -1 ஒன்று :

என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.

எண்-2 இரண்டு :

என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் ஷாம்பு டப்பா மற்றும் சில கடினமான பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.

எண்-3 மூன்று :
பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள குறியீட்டு எண்கள் குறிப்பது என்ன?
என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப் பொட்டலங்கள் கட்டும் பைகள், பைப்புகள், கிளினிங் பவுடர்கள் அடைத்துள்ள டப்பாக்கள், போன்றவைகள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.

இது டையாக்ஸின் போன்ற நச்சு வாயுக்களை வெளியேற்று வதால் நம் உடலுக்கு பல விதமான தீங்குகளை விளைவிக்கும். சூடான பொருட்கள் எதுவும்  இதில் வைக்கக் கூடாது.

எண்-4 நான்கு :

என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொருட்களும், கேரியர் பைகளும் தயாரிக்கப்படும்.

எண்-5 ஐந்து :
என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவுப் பொருட்களை வைக்கவோ, பயன்படுத்தவோ கூடாது. மைக்ரோவேவ் அடுப்பில் பயன் படுத்தலாம்.

எண்-6 ஆறு :

என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப் பொருட்களை வைத்து சாப்பிடலாம். ஆனால் எடுத்துச் செல்லக் கூடாது.

எண்-7 ஏழு :

என்ற எண் பொறிக்கப் பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை உலக நாடுகள் தடை செய்து உள்ளன.ஆனால் இந்தியாவில் மட்டும் இல்லை.
இதிலிருந்தே எத்தகைய தீங்கானது என அறியலாம். 1 முதல் 4 வரை உள்ள எண் பொறித்த பிளாஸ்டிக்குகள் உணவு எடுத்துச் செல்ல பயன்படுத்தக் கூடாது. 

அவை வெப்ப சூழல் மாறும் போது கார்சினோசின் எனப்படும் வாயுவை வெளியிடுவதால் புற்று நோய்கள் வரும்.

5 மற்றும் 6 எண் பொறிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை வைக்கவோ, அல்லது எடுத்துச் செல்லவோ கூடாது.
Tags:
Privacy and cookie settings