குதிரை பேரம் என்றால் என்ன? தெரியுமா?

0

குதிரை பேரம்... இந்த வார்த்தைகளை இப்போதெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். 

குதிரை பேரம் என்றால் என்ன? தெரியுமா?
எங்கெல்லாம் அரசியல் சூழ்நிலை சற்றே நிலைத் தன்மையை இழந்து விடுகிறதோ, அங்கே குதிரை பேரம் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அதனைத் தடுக்க வேண்டும் என குடியரசு தலைவருக்கோ ஆளுநருக்கோ கோரிக்கையும் எழுகிறது. நம்மைப் பொறுத்தவரை எம்.எல்.ஏக்களை விலை பேசுவதுதான் குதிரை பேரம். 

ஆனால், இந்தப் பெயர் எதற்காக வந்தது? அரசியலுக்கும் குதிரைகளுக்கும் என்ன தொடர்பு? குதிரை பேரம் என்ற இந்தச் சொல்லை ஆங்கிலத்தில் ஹார்ஸ் டிரேடிங் என்கிறார்கள். 

நாண், சப்பாத்தியுடன் சாப்பிட கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

அதாவது குதிரை வர்த்தகம்.சரி, ஏன் இந்தப் பெயரை அரசியல் நடவடிக்கைகளுக்கு வைத்தார்கள்? வாங்க பார்க்கலாம். மனித முன்னேற்றத்தில் குதிரைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.

கார், லாரி போன்றவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை மிக நீண்ட பயணத்திற்கும், சரக்குப் போக்குவரத்துக்கும் குதிரைகளே பயன்படுத்தப்பட்டன.

எனவே, 17ஆம் நூற்றாண்டு வரை மிக மிக விலை உயர்ந்த தொழிலாக குதிரைகள் தொழில் கருதப்பட்டது.

நம் ஊரில் கூட எந்தப் பொருள் விலை அதிகம் விற்றாலும் 'என்னப்பா ஆனை விலை குதிரை விலை சொல்றே?' என்போம்.

யானையும் குதிரையும் தான் உலகம் முழுவதுமே காஸ்ட்லி பொருட்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி.அரேபியர்கள் விலையுயர்ந்த தொழில்களை மட்டுமே தேர்ந்தெடுத்து முன்னெடுத்தார்கள்.

சப்பாத்திக்கு அருமையான இறால் கிரீன் மசாலா செய்வது எப்படி?

அதில் முக்கியமானவை வைர வியாபாரமும் குதிரை வியாபாரமும் தான். ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஸ்பெயின், ஸ்காட்லாந்து போன்றவை குதிரை விற்பனைக்கு பெயர் பெற்ற இடங்கள்.

இன்றும் குதிரை தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு horse whisperers... அதாவது, குதிரையிடம் ரகசியம் பேசுகிறவர் என்றுதான் பெயர்.

இவர்கள் குதிரையின் உடல் அசைவுகளை வைத்தே அவை என்ன சொல்கின்றன எனக் கண்டுபிடிப்பார்களாம்.

இத்தனை திறமை மிக்க குதிரை வியாபாரிகள் மிகப் பெரிய ஏமாற்றுக்காரர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

கழுதையைக் கூட பந்தயக் குதிரை என்று சொல்லி விற்று விடும் அளவுக்கு கைதேர்ந்தவர்களாம் அவர்கள். 

அதே சமயம், குதிரை வாங்க வருகிறவர்களும் கொடாக்கண்டனுக்கு ஏற்ற விடாக்கண்டனாகத் தான் இருப்பார்களாம். 

பத்தாயிரம் ரூபாய் குதிரையை மனசாட்சியே இல்லாமல் ஐநூறு ரூபாய்க்கு விலை கேட்பதும் சில பல பேச்சு வார்த்தைக்குப் பின் 

அறுநூறு ரூபாய்க்கு அந்த டீல் முடிக்கப்படுவதும் குதிரை வியாபாரத்தில் மட்டுமே நடக்கும் அதிசயம் என்கிறார்கள்.

வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

இதைப் பார்த்துப் பார்த்து பழகிப் போன இங்கிலாந்துக்காரர்கள், இந்த குதிரை வியாபாரமே இப்படித்தாம்பா என ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

காலப் போக்கில் மோசமான ஏமாற்று வேலைகள் எங்கே நடைபெற்றாலும் அதனை குதிரை வியாபாரம் அல்லது குதிரை பேரம் எனச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

குதிரை பேரம் என்றால் என்ன? தெரியுமா?

குதிரை பேரம் என்றால் அந்த இடத்தில் நியாயம் தர்மம் போன்றவை இருக்காது.குதிரை பேரம் நடைபெறும் இடத்தில் நாம் நினைத்துக் கூட பார்க்காத வர்த்தக உடன்படிக்கைகள் ஏற்படும்.

குதிரை பேரம் நடக்கும் இடத்தில் விற்பவர், வாங்குபவர் என இருதரப்பினருமே ஏமாற்றுக்காரர்களாக இருப்பார்கள்.

கேரட் சேர்த்து தக்காளி சாஸ் செய்வது எப்படி?

இவையெல்லாம் குதிரை பேரத்துக்கான இலக்கணங்கள். இந்த இலக்கணங்கள் அப்படியே பொருந்திப் போவது அரசியல் சூழ்நிலைகளில் தான் என்பதால், 

இந்த குதிரை பேரம் என்பது மோசமான அரசியல் நடவடிக்கைகளுக்கு நிரந்தரக் குறியீடாகி விட்டது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)