நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள் தெரியுமா?

0

ரெட்டினா பகுதி பாதிப்படைவதனால் கண் பார்வையை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு டயபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) என்று பெயர். 
நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள் தெரியுமா?

அதிகளவு சிறுநீர் கழிப்பதனாலும் சிறுநீரகங்களின் அதிகளவு செயற்பாட்டின் காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. இதற்கு டயபடிக் நெவ்ரோபதி (Diabetic Nepropathy) என்று பெயர்.

இரத்தக்குழாய்கள் சுருக்கமடைவதினால் கை, கால் என்பனவற்றின் இழையங்களுக்குத் தேவையான போஷாக்கு 

சரிவரக் கிடைக்கப் பெறாததினால் கலங்களுக்குத் தேவையான போஷாக் கின்மையால் கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. 
இதன் அறிகுறியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் கறுத்தும் உணர்ச்சியற்றும் போகின்றன.  இதுவே டயாபடிக் கங்கரின் (Diabetic Gangrene) என்றழைக்கப்படுகிறது. 

இதனால் நாம் பாதிப்பேற் படும் உறுப்பை இழக்க வேண்டியும் வரலாம். இது மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய்கள் என்பனவும் ஏற்படவும் வாய்ப்புண்டு. 

அத்துடன் சர்க்கரை வியாதி கை, கால் நரம்புகள், எலும்புகளையும் பாதிக் கின்றன. இது டயபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) எனப்படும். 
நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள் தெரியுமா?
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப்பிடிப்பு, வலி, எரிச்சல் மற்றும் மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தெரியும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரைகளை எடுத்த பின்னர் 

உணவு உட்கொள்ளத் தவறுவதும் அதாவது உண்பதில் நேரந்தவறாமை கடைப்பிடிக்கப்படா மையும்,
ஈசான்ய மூலை என்பது எது?
பயத்தினால் சர்க்கரையின் அளவை அளவிற்கு மீறிக் குறைப்பதும் கூட ஆபத்தை விளைவிக்கும். சர்க்கரையின் அளவு குறைந்தால் (Low Blood Sugar) மயக்கம், உடல் வியர்த்தல் போன்றவை ஏற்படும்.

இந்நிலையைத் தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் எப்போதும் சர்க்கரையோ அன்றி இனிப்புகள் எதாவதோ கைவசம் வைத்திருத்தல் அவசியம். 

சர்க்கரைக் குறைவை கவனித்து நிவர்த்தி செய்யவிடின் மேலும் குறைந்து கோமா (Coma) நிலை ஏற்படும் அபாயம் உண்டு. 

நமது உடலில் சர்க்கரை அதிக மானாலும் சரி, குறைந்தாலும் சரி பாதிப்பு நமக்குத் தான்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள் தெரியுமா?
எனவே நீரிழிவைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் மூலிகைகள், உணவு முறைகள், உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக மேற்கொள்வதன் மூலம் எந்த விதமான பின் விளைவுகளும் இன்றி நன்றாக வாழலாம் என்பது உறுதி.
தனிநபர் கடன் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் !
வேப்பிலை, வில்வம், அத்தியிலை, முருங்கையிலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, மாவிலை, வெற்றிலை எல்லா இலை களையும் நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். 

இதிலிருந்து இரண்டு தேக்கரண்டி தூள் எடுத்து நீரில் கலந்து காலை, மாலை இரவு உணவிற்கு முன்பாக உண்டுவர பலன் கிடைப்பது உறுதி.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)