கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ஆட்டோ ஓட்டுநர் !

0

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ஆக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுரான சரவணன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ஆட்டோ ஓட்டுநர் !
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் தேர்தல் தற்போது நடைபெற்றுள்ளது. 

மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக 38, அதிமுக 3, சுயேச்சைகள் 3, காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடங்களில் வெற்றி பெற்றன. 

திமுகவைச் சேர்ந்தவர் முதல் மேயராக பதவியேற்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், மேயர் பதவி கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷேன் வார்னே.. அறிந்திடாத சுவாரசிய தகவல் !

இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநகராட்சி உறுப்பினராகியுள்ள இருவரில் 17வது வார்டில் இருந்து 

தேர்வான கே.சரவணன் கும்பகோணத்தின் முதல் மேயராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் முறையாக போட்டியிட்டு, வென்றுள்ளார். 

நேற்று முன் தினம் வரை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த சரவணன், தற்போது மேயராகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ஆட்டோ ஓட்டுநர் !

கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணன். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளாக நகரத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி தொழில் நடத்தி வருகிறார். 

இவருக்கு மனைவி தேவி, மூன்று மகன்கள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநராக இருப்பதால், மாநகரின் அனைத்து பகுதிகளையும் நன்றாக அறிவேன். 

ஆகையால் முதல் மேயராக பொறுப்பேற்ற நான் முதன்மையான மேயராகவும் பணியாற்றுவேன் என்கிறார் சரவணன். நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் ஆட்டோ ஓட்டி வருகிறேன். 

முதலில் வாடகை ஆட்டோ ஓட்டினேன், கடந்த 7 ஆண்டுகளாக சொந்த ஆட்டோ ஓட்டி வருகிறேன். 

சொந்தமாக ஆட்டோ இருந்தாலும், வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். ஆட்டோ ஓட்டும் வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன். என்கிறார்.

தாவர உணவின் அடிப்படை நன்மைகளை காணலாம் !

தொடர்ந்து அவர் அரசியலுக்கு வந்தது குறித்து கூறுகையில், எனது தாத்தா குமாரசாமி கடந்த 1976ம் ஆண்டும் கும்பகோணம் நகராட்சி உறுப்பினராக இருந்தார். 

அவரால் காங்கிரஸ் கட்சியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. முதலில் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து, வார்டு தலைவர், நகர துணைத் தலைவராக உள்ளேன். 

கட்சி நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. இப்போது மேயராகவும் ஆக்கியுள்ளது என்கிறார்.

கும்பகோணத்தில் 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருவதால், மாநகராட்சியின் 48 வார்டுகளும் எனக்கு அத்துப்படி. 

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ஆட்டோ ஓட்டுநர் !

அனைத்து தெருக்களையும் அங்குள்ள பிரச்னை, தேவைகள் என அனைத்தையும் நேரடியாக அறிந்தவன். ஆகையால், மக்கள் தேவைகளை தடையின்றி, உடனடியாக நிறைவேற்றுவேன்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பாதாள சாக்கடைப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்படும். 

காதில் நுழைந்த பூச்சியை எடுப்பது எப்படி?

குடிநீர், மின் விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் தடை ஏற்பட்டால், உடனே கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். 

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்து மாநகராட்சி மேம்பாட்டுக்கான திட்டங்களை கொண்டு வருவேன் என்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings