இந்த நோய்க்கு உடலுறவு தான் தீர்வு என்று ப்ளான் செய்து மோசடி செய்த டாக்டர் !





இந்த நோய்க்கு உடலுறவு தான் தீர்வு என்று ப்ளான் செய்து மோசடி செய்த டாக்டர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் ஜியோவானி மினிலோ. மருத்துவ நிபுணரான இவர் சிறந்த சிகிச்சைக்காக டாக்டர் மேஜிக் ப்ளூட் என்று அப்பகுதியில் அழைக்கப்படுகிறார். 

இந்த நோய்க்கு உடலுறவு தான் தீர்வு என்று ப்ளான் செய்து மோசடி செய்த டாக்டர் !
இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், 

அவர்களின் அனுமதியின்றி பெண்களின் அந்தரங்க பாகங்களை தொடுவதாகவும் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்துள்ளது.

இந்த நிலையில், பெண் ஒருவர் மினிலோவிடம் எச்.பி.வி. என்ற வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு சென்றுள்ளார். 

பருமனான பெண்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் !

அந்த பெண்ணிடம் மருத்துவர் மினிலோ உடலுறவு மூலம் குணப்படுத்த முடியும் என்றும், தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். 

அவர் தனது சட்ட ஆலோசகருடன் ஆலோசனை பெற்றுள்ளார். அவர் இத்தாலி நாட்டில் மிகவும் பிரபலமான லி லேன் என்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.

இந்த நோய்க்கு உடலுறவு தான் தீர்வு என்று ப்ளான் செய்து மோசடி செய்த டாக்டர் !

இதையடுத்து, புலனாய்வு நிகழ்ச்சியான அந்த நிகழ்ச்சியைச் சேர்ந்த பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அந்த பெண் கூறிய அதே பிரச்சினை தனக்கும் இருப்பதாக கூறினார். 

அந்த பெண்ணிடமும் மருத்துவர் மினிலோ உடலுறவு மூலம் இந்த வியாதியை குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். 

மேலும், உடலுறவின்போது பாதுகாப்பாக உடலுறவு மேற்கொண்டாலும் இந்த வியாதியை குணப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். 

பின்னர், இந்த வியாதியை குணப்படுத்துவதற்காக அந்த நாட்டில் உள்ள பிரபலமான ஹோட்டலுக்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார்.

அங்கே ரகசிய கேமராவுடன் சென்ற அந்த பெண்ணுக்கு, ஹோட்டல் அறையை திறந்தவுடன் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே 60 வயதான மரு்ததுவர் மினிலோ அரை நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார். 

இந்த நோய்க்கு உடலுறவு தான் தீர்வு என்று ப்ளான் செய்து மோசடி செய்த டாக்டர் !

கேமராவில் படம்பிடிக்கப்பட்ட பிறகு இது தொடர்பாக அந்த மருத்துவரிடம் கேட்ட போது, அவர் என்னுடைய ஆய்வுக்காகத் தான் இதைச் செய்கிறேன். 

பெண்கள் சாப்பிட வேண்டிய சேனைகிழங்கு !

இதன் மூலம் மற்ற மக்களை காப்பாற்றுகிறேன் என்று கூறியுள்ளார். தெற்கு இத்தாலியில் உள்ள பாரி நகரத்தில் மிகவும் பிரபலமான இந்த அறுவை சிகிச்சை நிபுணர் மினிலோ 

இதுவரை 15க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இது போன்ற பாலியல் தொல்லைகளை அளித்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)