வீட்டுக்குள் 125 விஷப்பாம்புகளுடன் இறந்த முதியவர்... மர்மத்தை உருவாக்கிய வீடு !

0

அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மாகாணத்தில் ஒரு வீட்டில் 49 வயது டேவிட் என்ற நபர் இறந்து கிடந்துள்ளார். 

வீட்டுக்குள் 125 விஷப்பாம்புகளுடன் இறந்த முதியவர்...  மர்மத்தை உருவாக்கிய வீடு !

இறந்து கிடந்த நபரை வீட்டில் இருந்து மீட்க முயற்சி செய்த போது குறைந்தது அவரை சுற்றி 125 பாம்புகள் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பாம்ஃப்ரெட் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் டேவிட் ரிஸ்டன் (வயது 49) என்பவர் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த புதன் கிழமை (ஜன. 19) இரவு, அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அவரைக் காணச் சென்றிருக்கிறார். 

மழையின் போது மண் வாசனை எப்படி உருவாகிறது?

முந்தைய தினம் அவரைப் பார்க்காததால் டேவிட்க்கு என்ன ஆயிற்று என்று அறிவதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற அவர், 

ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க, வீட்டுக்குள் டேவிட் பேச்சு மூச்சில்லாமல் தரையில் கிடப்பதைக் கண்டு போலீசாரை அழைத்துள்ளார்.

இதையடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, அந்த முதியவர் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். 

அந்த நபரை சுற்றி 14 அடி மஞ்சள் பர்மிய மலைப்பாம்பு உட்பட 125க்கு மேற்பட்ட விஷ பாம்புகள் உயிருடன் இருந்துள்ளது. 

வீட்டுக்குள் 125 விஷப்பாம்புகளுடன் இறந்த முதியவர்...  மர்மத்தை உருவாக்கிய வீடு !

தொடர்ந்து, அந்த நபரை மீட்டு பரிசோதனை நடத்தியதில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.  

மேலும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், இறந்தவர் தனது வீட்டில் மலைப்பாம்பு, பாம்பு, நாகப்பாம்பு, கருப்பு மாம்போ 

உள்ளிட்ட பல்வேறு வகையான பாம்புகளை வளர்த்து வந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர். 

வீட்டுக்குள் 125 கூண்டுகளுக்குள் பல்வேறு வகை பாம்புகள் இருந்திருக்கின்றன. அவற்றை உணவளித்து வளர்த்து வந்திருக்கிறார் டேவிட்.

இரும்பு சத்து மற்றும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்த வாழை இலை !

விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாம்புகளை பிடித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீட்டுக்குள் 125 விஷப்பாம்புகளுடன் இறந்த முதியவர்...  மர்மத்தை உருவாக்கிய வீடு !

பின்பு, கவுண்டியின் தலைமை விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரி காவல்துறைக்கு அளித்த தகவலில், 

தனது 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில் இது போன்ற சம்பவத்தை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார். 

வட கரோலினா மற்றும் வர்ஜீனியாவைச் சேர்ந்த பாம்பு நிபுணர்களின் உதவியுடன், சார்லஸ் கவுண்டி அனிமல் கன்ட்ரோல் பாம்புகளை மீட்டனர்.

வைட்டமின் இ சத்து உள்ள பாதாம் !

அவற்றில், எதிரே வருபவரின் கண்களில் விஷத்தைக் கக்கக்கூடிய நல்லபாம்பு, பயங்கர விஷமுடைய கருப்பு மாம்பா 

போன்ற பாம்புகளும் அடக்கம். இந்த பாம்புகளை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும்.

சுற்றுப்புறத்தில் வசிப்போர் பாம்புகள் குறித்து பயப்பட தேவையில்லை. அனைத்து பாம்புகளும் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

வீட்டுக்குள் 125 விஷப்பாம்புகளுடன் இறந்த முதியவர்...  மர்மத்தை உருவாக்கிய வீடு !

மேரிலாந்து சட்டத்தின்படி, பாம்பை வீட்டில் யாரும் செல்லப் பிராணியாக வளர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், டேவிட் தான் வளர்த்த பாம்புகளாலேயே கொல்லப்பட்டாரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையில், டேவிட் தனது வீட்டை ஒரு பாம்புப் பண்ணையாக மாற்றி வைத்திருந்தது தங்கள் யாருக்கும் தெரியாது என்கிறார்கள் அக்கம் பக்கத்தவர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)