முஹம்மது ஆதில் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !

0

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்): கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த முஹம்மது ஆதில் (16). இவர் அல் அமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறார்.

முஹம்மது ஆதில் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !
இவர் தற்போது கும்பகோணம் அருகே உள்ள பூக்கொல்லையில் வசித்து வருகிறார். இன்று (28/02/2022) காலை அவர் பள்ளிக்கு செல்ல பஸ்ஸில் ஏறும் போது படியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்து விட்டார்.

வலங்கைமான் மன்சூர் அலி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.

மகனை பிரிந்து துயரப்படும் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் மன ஆறுதலையும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையையும் தந்தருள்வானாக (ஆமீன்).

இறைவன் இவருடைய  பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள் . அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!

பேருந்தில் பள்ளி செல்லும் மாணவர்களை விழிப்புணர்வோடு பயணிக்க அறிவுறுத்துவோம்.  

பேருந்துகளில் மாணவர்கள் கூட்டநெரிசலில் போதிய இடமின்றி, படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வது வாழக்கமான ஒன்றாகி விட்டது. 

இதனால் அவ்வப்போது மாணவர்களுக்கும், பேருந்து ஓட்டுநனர், நடத்துனர்களுக்கும்  இடையே பிரச்சனைகள் கிளம்பி, தகராறில் முடிவது போன்ற சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 

சில சமயங்களில் பேருந்து படிக்கட்டுளிலும் ஜன்னல்களிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி, செல்வதால் விபத்து நேரும் அபாயங்களும் நம்மால் பார்க்க முடிகிறது. 

அப்படித்தான் இந்த விபத்தும் நடந்து இருக்கிறது. இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளிலும், ஜன்னல்களிலும் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்கவும், 

மேலும் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாகப் பயணம் செய்யவதை உறுதி செய்யவும் அரசு பொது போக்குவரத்து கழகம் சார்பில் காலை, மாலை இருவேளைகளில் மாணவர் சிறப்புப் பேருந்து இயக்கப்பட வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)