13 வயது சிறுவனால் பேஸ்புக் முடங்கியது என்பது உண்மைதானா?

0

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் அக்டோபர் 4 ஆம் தேதி திடீரென முடங்கி போயின. 

13 வயது சிறுவனால் பேஸ்புக் முடங்கியது என்பது உண்மைதானா?
சேவைகள் முடங்கியதால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் இந்திய மதிப்பில் ரூ. 52 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தார். 

பேஸ்புக் முடங்கியதற்கான காரணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

அந்த வரிசையில், சீனாவை சேர்ந்த 13 வயது சிறுவன் தான் இந்த சேவைகள் முடங்க காரணம் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

காலிஃப்ளவர் பட்டாணி குருமா செய்வது எப்படி?

இதனை முன்னணி செய்தி நிறுவனம் வெளியிட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் தகவல் குறித்த இணைய தேடல்களில், முன்னணி செய்தி நிறுவனம் இவ்வாறு எந்த செய்தியையும் வெளியிடவில்லை என தெரிய வந்துள்ளது. 

பேஸ்புக் சேவைகள் முடங்க 13 வயது சீன ஹேக்கர் தான் காரணம் என வேறு எந்த தகவலும் இணையத்தில் கிடைக்கப் பெறவில்லை. 

பேஸ்புக் நெட்வொர்க்கின் வன்பொருள் மற்றும் மென்பொருள் அமைப்புகளை மாற்றியமைக்கும் போது ஏற்பட்ட பிழை காரணமாகவே சேவைகள் முடங்கியது, என பேஸ்புக் தனது வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது. 

கொரோனா பற்றி சர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !

அந்த வகையில் பேஸ்புக் நிறுவன சேவைகள் முடக்கத்திற்கு 13 வயது சீன ஹேக்கர் காரணம் இல்லை என உறுதியாகி விட்டது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)