விவகாரத்து விவகாரம், புஷ்பா பாடல் என கடந்த சில வாரங்களாக நடிகை சமந்தா மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
சமந்தா பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன். அது சொந்த வாழ்க்கையானாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி,
சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம்
அவர் அதை எதிர்கொண்டு போராடும் வலிமை தான் இன்றும் அவரை ஒரு ஸ்டாராக உயர்த்தியுள்ளது.
தனித்துவ நடிப்பு, அழகு, நடனம் என தன் துறை சார்ந்த வளர்ச்சிக்காக அவர் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சிகளும் தான் அவரின் அசைக்க முடியாத வெற்றிக்கு காரணங்களாக இருக்கின்றன.
குறிப்பாக தன் சுய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதிலும், ஃபிட்டாக இருப்பதிலும் அவர் ஒரு நாளும் சளைத்ததில்லை.
அதற்கு அவருடைய இன்ஸ்டாகிராம் வீடியோக்களே சாட்சி. ஆண்கள் கூட செய்யத் தயங்கும் ஒர்க் அவுட்டுகளை அசாதாரணமாக செய்து முடிப்பார்.
அதனால் தான் பலரும் பார்த்து பொறாமைப்படும் கொள்ளை அழகுடன் மிளிர்கிறார் சமந்தா.
நீங்கள் ரோட்டுக் கடைகளில் சாப்பிடும் ஆர்வம் உள்ளவரா?
அவரது எளிமையான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி வழக்கமே அவரை இன்று வரை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
குண்டு உடலை குறைக்க எளிய முறையில் !
நாமும் இது போன்ற உடலழகைப் பெற உழைக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.
சமந்தா வழக்கமான உடற்பயிற்சிகளைக் கூட சுவாரஸ்யமானதாக மாற்ற சில விஷயங்களை கையாளுகிறார்.
இதனால் அந்த பயிற்சிகள் சளிப்பு தட்டுவதில்லை. ஒவ்வொரு நாளும் புதிதாகவே தோன்றும்.
இதை பலரும் தங்கள் தினசரி ஒர்க் அவுட்டில் இனைத்துக் கொண்டால் உங்களுக்கும் உடற்பயிற்சிகள் போர் அடிக்காது.
எடைப் பயிற்சி, புல்-அப் பயிற்சிகள், யோகா, சைக்கிள் மற்றும் கார்டியோ ஆகியவை சமந்தா செய்யும் பயிற்சிகளாகும்.
அது மட்டுமன்றி 2022 ஐ பாசிடிவாக கொண்டு செல்லும் விதமாக ஒரு சேலஞ் செய்துள்ளார்.
காலை உணவை தவிர்த்தால் இருதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு !
அதாவது முழங்காலைப் பயன்படுத்து ஜம்பிங் ஸ்குவாட் செய்ய வேண்டும். இதில் எந்த கருவியும் பயன்படுத்தக் கூடாது.
அதில் சமந்தா 2022 ஆண்டை கருவிகள் இல்லாமல் உடலை லெவல் அப் செய்ய சவால் விடுகிறேன்.
உங்கள் கலோரிகளை எரிக்க இதுவே நல்ல தொடக்கம் எனக் கூறியுள்ளார்.
நடிகை சமந்தா தற்போது விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், தெலுங்கில் சகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
1: இரு கைகளையும் இருகப் பிடித்து கால்களையும் மடக்கி மண்டியிடவாறு அமர வேண்டும்.
2: பின் மூச்சை நன்கு உள்ளிழுக்கவும். பின்னர் மூச்சை வெளிவிட்டு ரிலாக்ஸ் ஆகுங்கள்.
3: இறுதியாக உங்கள் ஒட்டு மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி குதித்து அமருங்கள்.
ஆண்கள் ஏன் தாடி வளர்க்கிறார்கள் !
4: நீங்கள் ஆரம்ப நிலைக்குத் திரும்பும் போது மூச்சை உள்ளிழுக்கவும்.
நீங்கள் முழங்காலில் ஜம்ப் ஸ்குவாட் செய்யும் போது, உங்கள் கால், இடுப்பு, தொடை எலும்புகள் மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் கலோரிகள் குறைவதை உணரலாம்.
இந்த உடற்பயிற்சி குறுகிய காலத்தில் அதிக அளவு கலோரிகளை எரிக்க உதவுகிறது.
அதே நேரத்தில் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை 48 மணிநேரம் வரை அதிகரிக்கிறது.
இந்த உடற்பயிற்சி உங்கள் மைய மற்றும் கீழ் முதுகு வலிமையையும் மேம்படுத்துகிறது.