ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?

0

வயிற்றுவலி, தலைவலி, அஜீரணம் தீர வேண்டுமா... கொழுப்பைக் கரைக்க வேண்டுமா? எல்லா உபாதைகளையும் சமையல் அறையில் இருக்கும் பொருளைக் கொண்டே தீர்த்து விடுவார்கள் நம் பாட்டிமார்கள். 

ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?

அதே போல இது போன்ற பிரச்னைகளுக்குப் பல வெளிநாட்டினருக்கு இன்ஸ்டன்ட் கஷாயமாகப் பயன்படுவது ஆப்பிள் சிடர் வினிகர் தான். 

ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும் ஒன்று இது. 

பிரிட்ஜ் பராமரிப்பது எப்படி? 

நம்மூர் சூப்பர் மார்க்கெட்டில்கூட நாம் இதைப் பார்த்திருப்போம். ஆனால், பலரும் இதை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டிருப்போம். 

ஆப்பிள் ஆயுளைக் கூட்டும் என்றால், ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும்.

நம்மில் பெரும்பாலானோர் தினமும் ஆப்பிள் சிடர் வினிகரை (Apple Cider Vinegar) உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்போம். 

ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்களில் தொடங்கி சாமானியர் வரை அனைவரும் ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்களைப் பட்டியலிடுவதைப் பார்க்க முடிகிறது. 

ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?

சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட கதாநாயகிகள் கூட ஆப்பிள் சிடர் வினிகரின் நன்மைகள் குறித்து சமீபத்தில் தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

ஆப்பிள் சிடர் வினிகரை உணவில் சேர்த்துக் கொள்வது உண்மையில் உடலுக்கு நல்லதா, யாரெல்லாம் இதை எடுத்துக் கொள்ளலாம் 

தஞ்சை பெரிய கோவில் தகவல்கள் - நம்ப முடியாதது !

ஆப்பிள்களிலிருந்து பெறப்படும் ஆப்பிள் சீடர் வினிகர் பெரும்பாலானோர் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 

இது பெரிய மளிகை கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள், ஆன்லைனில் கூட தற்போது கிடைக்கிறது. 

ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?

பொதுவான அழகு சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாக ஆப்பிள் சீடர் வினிகர் உள்ளது. 

இது உங்கள் சருமம் மற்றும் உச்சந்தலையில் அமில-கார சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.

வைட்டமின் F தெரியுமா? உங்களுக்கு.., இதையும் தெரிஞ்சுக்கங்க !

ஆப்பிள் ஜூஸை நொதிக்க வைத்து (Fermentation) இது தயாரிக்கப்படுகிறது. புளிப்புச் சுவையுடையது. இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. 

அசிட்டிக் ஆசிட் (acetic acid), மாலிக் ஆசிட் (malic acid), லாக்டிக் ஆசிட் (lactic acid), சிட்ரிக் ஆசிட் (citric acid) என்ற நான்கு வகையான அமிலங்கள் இதில் உள்ளன.

ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள்

ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?

ஆப்பிள் சிடர் வினிகரைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க முடியும். 

நீர் சத்து குறையாமல் இருக்க இதை செய்தால் போதும் ! 

வயிற்றின் முன்பகுதி, இடுப்பு மற்றும் உடலில் அங்கங்கே படிந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும் ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது.

அஜீரணப் பிரச்னையை இது குணப்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, 

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் குடித்து வர, உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும். 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிப்பதிலும் இது முக்கிய இடம் வகிக்கிறது.

ஆப்பிள் சிடர் வினிகரில் அதிகப்படியான அமிலத்தன்மை உள்ளதால் இதை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. 

பழங்கள் அல்லது காய்கறி சாலட்டுடன் கலந்து சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை 100 மி.லி தண்ணீரில் நன்றாகக் கலந்து அருந்தலாம்.

அருமையான தம் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

அமிலத் தன்மை கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபட உதவுகிறது. 

காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். 

ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?

இதை தொடர்ந்து ஐந்து முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்து வர, கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். 

தனியாக பயணம் செயயும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் ! 

ஆனால், இதை 15 நாள்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது. 

தினமும் செய்தால் வினிகரில் உள்ள அதிகப்படியான அமிலத் தன்மையால் பற்களின் எனாமல் பகுதி தேய்மானம் அடைய வாய்ப்பிருக்கிறது.

இதனால் சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. 

அதனால் தான் பெரும்பாலான அழகு கலை நிபுணர்கள் ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர். 

உங்கள் கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டாலோ, அதிகமாக கொட்டினாலோ நீங்கள் ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி பார்க்கலாம். 

இது உங்கள் கூந்தலுக்கு பிரகாசத்தை சேர்க்கிறது. நீங்கள் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு பயன்படுத்தி உங்கள் முடியை நன்கு அலசவும். 

உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கான சமந்தாவின் உடற்பயிற்சி !

பின்னர் ஒரு குவளை தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கடைசியாக ஒரு முறை மீண்டும் அலசவும். 

இப்படி செய்து வந்தால் முடி உதிர்வு குறைந்து நன்கு வளரும்.

ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?

உங்களுக்கு பொடுகு இருந்தால், தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன், இரண்டு தேக்கரண்டி வினி கரை உச்சந்தலையில் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். 

அல்லது பருத்தி துணி/பஞ்சில் வினிகரை தொட்டு உச்சந்தலையில் மெதுவாக தேய்க்கவும். 

பிறகு மைல்டு ஷாம்பூ கொண்டு தண்ணீரில் உங்கள் தலைமுடியை அலசவும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால் பொடுகு பிரச்னை நீங்கிவிடும்.

சரும பராமரிப்பிலும் ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுகிறது. ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்துக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

வீட்டிலேயே வொர்க்கவுட் செய்வதன் மூலம் நீங்கள் சூப்பர் ஃபிட் ஆகலாம் !

இதைப் பஞ்சில் தொட்டு சருமத்திலும், முகத்தில் பருக்கள், தேமல், கரும்புள்ளி உள்ள இடங்களிலும் தடவி 5 - 10 நிமிடங்கள் காற்றில் காய வைத்து பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். 

இவ்வாறு செய்து வர சருமம் பளபளவென்று பொலிவடையும். ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது.

வயிற்றுப்புண், அல்சர் போன்ற பிரச்னை உள்ளவர்கள் ஆப்பிள் சிடர் வினிகரை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. 

ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?

அமிலத்தன்மை மிகுந்திருப்பதால் குழந்தைகளும் முதியவர்களும் கூட இதைத் தவிர்க்கலாம். 

தவிர நடுத்தர வயதுடைய ஆண், பெண் இருவருமே இதை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

பாரம்பரிய மிக்க பொங்கல் செய்ய சில டிபஸ் !

இதைக் காலையில் அருந்துவது உடல் எடையைக் குறைக்கவும், இரவில் அருந்துவது ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சீராக்கவும் உதவும்.

தங்கள் உணவில் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்துக் கொள்ள விரும்புவோர், அதற்கு முன்பாக ஒரு டயட்டீஷியனிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings