7 வினாடி விளம்பரத்திற்கு 10 இலட்சம்... ரம்மி நிறுவன ஊழியர் சொன்ன ரகசியம் !

0

எந்த விதமான விளையாட்டு செய்கையாக இருந்தாலும், அதனை திரும்பத் திரும்ப செய்யும் போது, அதன் மீது நமக்கு நம்மை அறியாமலே ஆசை வந்து விடும். 

7 வினாடி விளம்பரத்திற்கு 10 இலட்சம்...  ரம்மி நிறுவன ஊழியர் சொன்ன இரகசியம் !

சீக்கிரம் அது நமக்கு பழகி விடும். அதனால் பணம் இழக்கப்போகிறோம் என்று தெரிந்தும், அதிலிருந்து மீள முடியாமல், பண மோகம் நம்மை இழுத்து சென்று விடும். 

அருமையான திரங்கா புலாவ் செய்வது எப்படி?

குறிப்பாக ஆன்லைனில் ரம்மி விளையாடிய நபர்களுக்கு இது பற்றி நன்றாகத் தெரியும். 

முதலில் போனஸ் வழங்குவதாகக் கூறி இலவசமாக அழைத்து விளையாடச் செய்வார்கள். 

அனைத்து விளையாட்டுகளிலும், எப்படியும் 80 சதவிகித அளவில் வெற்றி இருக்கும்.

உடனே மனது கணக்குப்போட ஆரம்பிக்கும், இலவசமா விளையாடும் போதே நமக்கு இவ்வளோ வெற்றி என்றால், 

பணம் போட்டு விளையாடினால், சீக்கிரம் பணக்காரனாகி விடலாம் என்ற அற்ப ஆசையில் உள்ளே இறங்குவாங்க. 

அப்படி 5 ரூபாய் 10 ரூபாய் என ஆரம்பித்து மெது மெதுவாக இழுத்துச் செல்லும். நாம் தோற்றதும் எவ்வளவு விரைவில் அடுத்த ஆட்டத்தில் இறங்குகிறோம், 

எவ்வளவு வேகமாக பணத்தை எடுத்து வைக்கிறோம் என்பதை சாப்ட்வேர் பார்த்துக் கொள்ளும். 

கேரட் சேர்த்து தக்காளி சாஸ் செய்வது எப்படி?

அதுக்கு ஏற்ப ஆட்டத்தின் ஈர்ப்பை கூட்டும். இது புரியாமல் பணத்தை போட்டுக் கொண்டே இருப்போம். நான் ஆன்லைனில் சீட்டாட்டத்தை விளையாடி பார்த்தேன். 

நான் வெற்றி பெறுவதற்கு ஒரு சீட்டு தான் தேவை எனும் பொழுது, அடுத்து என்ன சீட்டை பெறப் போகிறேன் என்பது ஒரு திரில். 

இதுவும் சமூக வலைத்தளம் போல், ஒரு மயக்கம் தரக்கூடியது. 

உங்களிடம் என்ன சீட்டு கைவசம் இருக்கிறது என்பது அனைத்தும் ஆன்லைன் கம்பெனிக்குத் தெரியும். 

மூணு ரவுண்ட் உங்களுக்கு நல்ல சீட்டு வர வைத்து பெட் பணத்தை ஏற்ற வைத்து நாலாவது ரவுண்டில் மொத்தமாக உருவி விடும். 

நிஜத்தில் சீட்டு ஆடும் போது, பக்கத்தில் இருந்து இன்னொருவருடைய கார்டை பார்த்துக் கொண்டே ஆட்டம் ஆடுவது போலத்தான் இதுவும்.

சுவையான டொமேட்டோ சாஸ் செய்வது எப்படி?

எந்த நேரத்திலும் உங்களை வீழ்த்த முடியும். அவர்கள் எதிர் பார்க்கும் தொகை வரும் வரையில், உங்களை வெற்றி பெற வைத்து வேடிக்கை பார்ப்பாங்க. 

எந்த காலத்திலும் சூதாட்டம், நூதன பணத் திருட்டின் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். 

குறுக்கு வழியில் சீக்கிரம் பணம் சம்பாதிக்க நினைப்பவரே இந்த பொறிகளில் சிக்குகிறார். இதன் நோக்கமே பணம் பறிப்பது தான். 

அதனால் ஆரம்பத்தில் விளையாடுபவரை வெல்ல விடும். வென்று வென்று வெறி ஏறத்தொடங்கும். 

அதன் உச்சியில் அடுத்த அடுத்து வரும் கடினமான ஆட்டங்களில் ஏற்படும் தோல்வி அந்த வெறியை வளர்க்கும். 

விட்டதைப் பிடிக்கிறேன் என்று உள்ளதையும் இழக்க நேரிடும். இது தான் கம்பெனி சீக்ரெட் என அந்நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஊழியரே சொல்றாங்க. 

உங்க வீட்ல மிக்ஸி இருக்கா... அப்ப இத கண்டிப்பா படிங்க ! 

அவங்க மென்பொருள் அல்காரிதத்தை தாண்டி, எவனும் பணத்தை எடுத்துச் செல்ல முடியாது.

இப்படித்தான் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய ஆனந்தன், 

7 வினாடி விளம்பரத்திற்கு 10 இலட்சம்...  ரம்மி நிறுவன ஊழியர் சொன்ன ரகசியம் !

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி வீட்டிற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் செல்போனில் ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்ச ரூபாய் இழந்துள்ளார். 

அதோடு விடாமல் நண்பர்களிடம் கடன் வாங்கியும் ரம்மி விளையாடி 10 லட்ச ரூபாய் இழந்துள்ளார்.

சுவையான எலும்பு சால்னா செய்வது எப்படி?

இந்நிலையில், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்  கண்டித்துள்ளனர். 

இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தன், அவரது அண்ணன் செளந்தர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings