நில்... கவனி... செல் மருத்துவக் குறிப்புகள் !

0

மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. 
நில்... கவனி... செல் மருத்துவக் குறிப்புகள் !
அது... தொற்றுக் கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச் செல்லும் வேலையைத் தான் செய்யும்.

தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
அது என்ன மறைமுக மன அழுத்தம்? அதை எப்படி கண்டுபிடிப்பது?
போஸ்ட் மார்ட்டம் என்றாலே பலருக்கும் ஒரு வித பயமும் பதற்றமும் இருக்கும். 

இதன் காரணமாக போஸ்ட் மார்ட்டத்தைத் தவிர்த்து விட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வது தான் எல்லாவற்றுக்கும் நல்லது. 
நில்... கவனி... செல் மருத்துவக் குறிப்புகள் !
பரிசோதனை அறிக்கை இருந்தால் தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், 
பெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்.. என்டோமெட்ரியம் - Endometrium !
சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்...

அமீபியாசிஸ் எனும் தொற்றுக் கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்து விடும். 

கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
நில்... கவனி... செல் மருத்துவக் குறிப்புகள் !
போரடிக்கிறது என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். 

லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும். ஓடுவது நல்ல உடற்பயிற்சி. 
மூட்டு வலியால் கஷ்டப்படுபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் !
ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.

கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். 
நில்... கவனி... செல் மருத்துவக் குறிப்புகள் !
இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவது தான் பயிற்சி. 

அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
சமைக்கும் போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. 

சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)