கால் கட்டை விரலில் வலி ஏற்பட காரணம் என்ன? பகுதி 2

0

நம் உடல் மிகவும் சுவாரய்ஸ்மான விஷயங்கள் நிரம்பியவை. உயிரினங்களின் முழு உருவம், உடல் என்று அழைக்கப் படுகிறது. தமிழ் மெய்யெழுத்துக்கள், உடல் (மெய்) என்றும் அழைக்கப்படுகிறது.

கால் கட்டை விரலில் வலி ஏற்பட காரணம் என்ன?
இறந்து போன உயிரினத்தின் சடலம். உயிர் நிலை பெற்றுள்ள இடம். இவற்றில் ஒன்றால் கால், கால் விரல்கள் இருக்கும் பகுதியில் சிறிய எலும்புகள், ஜாயிண்ட்ஸ், திசுக்கள் என ஏராளமன விஷயங்கள் இருக்கிறது. 

நாம் நடப்பதற்கும், நம்முடைய முழு உடலின் எடையை தாங்குவதற்கு ஏற்பவும் அவை வடிமைக்கப் பட்டிருக்கிறது. இவற்றில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட நம் உடல் இயக்கத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டிடும். 

உங்கள் பாதத்தில் ஏற்படுகிற மிகச்சிறிய வலியோ அல்லது பிரச்சனையோ உங்கள் மொத்த உடல் நிலையை பாதிக்கும் அளவிற்கு கூட ஏற்படுத்திடும். 

அதனை கவனமாக கையாள்வது மிகவும் அவசியமாகும். நம் உடலினைத் தாக்கக் கூடிய பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறி சில நம் கால்களில் தெரியும். அவை என்னென்ன என்று பார்க்கலாம். 

சிலருக்கு கால் கட்டை விரலில் வலி இருக்கும். அவை குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கவுட் :

கவுட்

இது நமக்கு பெரும் பிரச்சனையை கொடுக்கக்கூடியது. இதன் அறிகுறிகளை நாம் அவ்வளவு எளிதாக கடந்து வந்துவிட முடியாது. இதன் வலி கட்டை விரலில் மட்டுமல்ல பிற விரல்களிலும் இருக்கும்.

அதீத மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு இது ஏற்படும். உங்கள் ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் கலந்திருந்தால் கூட இந்த பிரச்சனை ஏற்படும். சிலருக்கு கால் பாதம் இருக்கிற பகுதி சிவப்பது, வீங்குவது போன்ற பிரச்சனையும் ஏற்படும்.

கால் வடிவமைப்பு :

கால் வடிவமைப்பு

கட்டை விரலுக்கும் கால் பாதத்திற்கும் இருக்கிற இடைவேளி அந்த ஜாயிண்ட்டை மெட்டர்ஸ்பலங்கேல் ஜாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது. 

நம் முழு பாதத்தின் செயல் இதில் அடங்கி யிருக்கிறது. இதனால் கட்டை விரலுக்கு அதிகமான அழுத்தம் கிடைக்கிறது. பொதுவாக அவற்றை எல்லாம் தாங்கும் தன்மையுடன் தான் இருக்கிறது. 

சில நேரங்களில் உங்களால் தாங்க முடியாத வலி ஏற்பட்டால் அதற்கான காரணம் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

புனியன்ஸ் :

புனியன்ஸ்

மிகவும் இருக்கமான ஷூ அணிந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இது ரத்த ஓட்டத்தை பாதிப்பதாலும் நீண்ட நேரம் அதிக அழுத்தத்தை தாங்குவதாலும் இந்த வலி ஏற்படுகிறது. 

சிலர் தங்க்கள் பாதங்களுக்கு பொருந்தாத ஷூ அணிவதாலும் இந்தப் பிரச்சனை ஏற்படக்கூடும்.

சீசாமோய்டிட்டீஸ் :

சீசாமோய்டிட்டீஸ்

காலில் இருக்கும் சீசமோய் எலும்புகளில் ஏற்படுகிற வீக்கம் மற்றும் பாதிப்பினால் இந்தப் பிரச்சனை உண்டாகும். அதிகமாக ஓடுவது, 

கட்டை விரலில் பேலன்ஸ் செய்திடும் நடன அசைவுகளை தொடர்ந்து ஆடுவது ஆகியவற்றால் இந்தப் பிரச்சனை ஏற்படக்கூடும்.

தீர்வுகள் :

தீர்வுகள்

இந்த கட்டை விரல் வலிக்கு தனியாக மருந்து மாத்திரை என்று எதுவும் இல்லை. உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றித்தினால் தான் தீர்வினை மேற்கொள்ள முடியும்.

இதற்கு தற்காலிக வலி நிவாரணிகள் மட்டுமே அளிக்கப் படுகிறது. முற்றிலுமாக போக்க வேண்டுமெனில் வாழ்க்கை முறையில் கொண்டு வரும் மாற்றமே சிறந்தது.

செய்ய வேண்டியவை :

கால் கட்டை விரலில் வலி செய்ய வேண்டியவை

முதலில் நீங்கள் அணியப் பயன்படுத்தும் ஷூ மற்றும் செருப்பை மாற்றிடுங்கள். நடனம் மற்றும் ஓட்டப் பயிற்சி தொடர்ந்து மேற்கொள்பவராக இருந்தால் சில நாட்களுக்கு அதனை நிறுத்திடுங்கள். 

வீக்கம் இருந்தால் அதனை குறைக்க மருத்துவ ஆலோசனை பெறுங்கள். காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிற வேலையை செய்ய வேண்டாம்.

கால் கட்டை விரலில் வலி ஏற்பட காரணம் என்ன? பகுதி 1

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)