இளைஞனை கடித்த சுறா... எந்த இடத்தில் தெரியுமா?

0

18 வயது இளைஞன் ஜோஸ் உல்லாசமாக பொழுது போக்க நினைத்து, கடலுக்கு சென்று நீச்சலடித்துக் கொண்டிருந்தார்.

இளைஞனை கடித்த சுறா... எந்த இடத்தில் தெரியுமா?
அம்மாவிடம் சொன்னால் தன்னை விடமாட்டார் என்பதால் தனது தாய்க்கு தெரியாமல், சகோதரர் மற்றும் நண்பர்களும் உடன் கடலுக்கு நீந்த சென்று விட்டார் அந்த இளைஞர். 

ஆனால், அந்த வாலிபன் மீண்டும் தனது தாயை பார்க்கவே முடியாமல் போய் விட்டது.

ஜாலியாக கடலில் நீந்திக் கொண்டிருந்த பிரேசிலை சேர்ந்த இளைஞர், சுறாக்கள் அதிகமாக இருக்கும் பகுதிக்குச் சென்று விட்டார். 

இதை கவனித்த கடற்கரையில் உள்ள உயிர் காப்பாளர்களும் அவரைத் திரும்பும்படி சமிக்ஞை செய்தனர். 

ஆனால் அவர் திரும்புவதற்கு முன்பே சுறா தாக்கியது. தாக்கிய சுறா, அந்த இளைஞனின் ஆணுறுப்பை கடித்து எடுத்துச் சென்று விட்டது.

'தி சன்' அறிக்கையின்படி, 18 வயதான ஜோஸ் எர்னெஸ்டர் டா சில்வா, பிரேசிலின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள 

'பைடட் பீச்' என்ற பிரபலமான கடற்கரைப் பகுதிக்கு பெற்றோர்களுக்குத் தெரியாமல் நீந்தச் சென்றார்.

கால் ஆணியை போக்கும் பூண்டு !

சுறாக்கள் அதிக அளவில் இருக்கும் ஆபத்து அதிகமான இடத்திற்கு அவர் சென்று விட்டார். 

இளைஞனை கடித்த சுறா... எந்த இடத்தில் தெரியுமா?

அந்த இடத்திலிருந்த உயிர் காப்பாளர்கள் அவர்களைப் பார்த்த போது, அவர்கள் உடனடியாகத் திரும்பும்படி சமிக்ஞை செய்தனர், ஆனால் ஜோஸ் திரும்புவதற்கு முன், சுறா தாக்கியது.
பைபாஸ் சிகிச்சைக்குப் பின் பின்பற்ற வேண்டிய சில வழிகள் !

இதை பார்த்த உயிர்காப்பாளர்கள் பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற உடனடியாக தண்ணீரில் குதித்தனர். 

ஆனால் அவர்கள் காப்பாற்றுவதற்கு முன்னரே, ஜோஸின் அந்தரங்க பகுதியை தாக்கிய சுறா, அவரின் ஆண் குறியை கடித்துக் குதறி விட்டது.

சிறிது முயற்சிக்குப் பிறகு, அவர் கரைக்குக் கொண்டு வரப்பட்ட போது, அவரது அந்தரங்க பகுதியில் இருந்து தொடர்ந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. 

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அதிக ரத்தப் போக்கு காரணமாக அவர் உயிரிழந்தார்.

ஜோஸ் தன்னிடம் எதுவும் சொல்லாமல் சென்று விட்டதாக அவரின் அம்மா எலிசங்கேலா டோஸ் அஞ்சோஸ் சோகத்துடன் சொல்கிறார். 

ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம் !

ஜோஸின் சகோதரர் 'பைட் பீச்' கடற்கரைக்கு உடனடியாக வரச் சொன்ன போது தான் அழைத்த போது அவருக்கு விபத்து பற்றி தெரிய வந்தது. 

இளைஞனை கடித்த சுறா... எந்த இடத்தில் தெரியுமா?

மகன் தன்னிடம் அனுமதி கேட்டிருந்தால், மறுத்திருப்பேன், அவன் உயிருடன் இருந்திருப்பான் என்று சொல்லி அழும் அந்தத் தாய், பெற்றோர் பேச்சை கேட்பதில் தவறில்லை என்று சொல்கிறார்.

அந்த இடம் சுறா தாக்குதலுக்குப் பெயர் பெற்றது. அதனால் தான் அவர் என்னிடம் எதுவும் சொல்லாமல் சென்று விட்டார் என்று வருந்துகிறார் தாய். 

பார்க்கின்சன் நோயை வெல்ல என்ன செய்வது?

18 வயதில் துடிக்கும் இளமையில் தாயிடம் மறைத்து, கடற்கரைக்கு சென்ற இளைஞன், ஆணுறுப்பை இழந்து துடிதுடிக்க ரத்தம் கசிந்து இறந்த சம்பவம் வருத்தத்தை தந்து வைரலாகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)