அமேசான் காடுகளை பற்றிய தகவல்கள் !

அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு. அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும்.
அமேசான் காடுகளை பற்றிய தகவல்கள் !
இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுர கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது.
அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக் காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும். 

இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரண மாகவே ஏற்பட்டது.

உலகின் மொத்த ஆக்சிஜன் தயாரிப்பில் 20% அமேசான் மழைக் காடுகளில் இருக்கும் மரங்களின் மூலமாக தான் வெளி வருகிறது. 

முன்னொரு காலத்தில், இப்போது ஓடிக் கொண்டிருக்கும் திசைக்கு நேர் மாறாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்ததாம் அமேசான் நதி. 
உலகில் உள்ள மழைக் காடுகளில் பாதி அளவுக்கு மேல் அமேசான் மழைக் காடுகள் என்பது குறிப்பிடத் தக்கது. அமேசானிய வண்ணத்துப் பூச்சிகள் ஆமைகளின் கண்ணீரை குடிக்கின்ற பழக்கம் கொண்டிருக்கின்றன. 

பிரேசிலில் அமேசான் நதிக்கு கீழே ஒரு நதி நான்கு கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில், இது நூறு மடங்கு அகலமானது என கூறப்படுகிறது. 

கடந்த 2008-ம் ஆண்டு நார்வே ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை, அமேசான் மழைக் காடுகளை பாதுகாக்க கொடுத்தது.

உலகின் மற்ற நதிகளை விட ஐந்து மடங்கு அதிகமான அளவு நீரை வெளியேற்றுகிறது அமேசான் நதி. பெருவில் இருக்கும் இக்விடோஸ் தான் உலகிலேயே பெரிய நகரம்.
கரியமில வாயு இல்லாத கட்டுமானப் பொருள் !
சாலைகளால் இந்த நகரை தொடர்பு கொள்வது இயலாத காரியம். இது அடர்ந்த அமேசான் மழைக் காட்டுக்குள் இருக்கிறது. 
அமேசான் காடுகளை பற்றிய தகவல்கள் !
இங்கு நான்கு லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அமேசான் நதிக்கு இடையே ஒரு பாலம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக் காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப் பட்டுள்ளது. 
2.5 மில்லியன் பூச்சியினங்கள், 10,000-க்கும் அதிகமான தாவர வகைகள், ஏறத்தாழ 2000 -க்கும் மேற்பட்ட பறவை வகைகள் மற்றும் பாலூட்டிகளுக்கு அமேசான் மழைக் காடுகள் தான் தாயகமாக விளங்குகிறது. 

உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று அமேசான் மழைக் காடுகளில் வசிக்கின்றன.
Tags:
Privacy and cookie settings