காபாவிற்கு போர்வை போர்த்தி அதை கௌரவப்படுத்திய மன்னன் !

0

பூமியில் உயிரினங்கள் படைக்கப்படுவதற்கு முன் பூமி முழுவதும் நீரால் நிரம்பி இருந்தது, அதன் ஓரிடத்தில் நுரை தோன்றியது, அவ்விடத்தில் தான் காபா  நிர்மாணிக்கப்பட்டது.

காபாவிற்கு போர்வை போர்த்தி அதை கௌரவப்படுத்திய மன்னன் !
ஆதம் நபி படைக்கப்படுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே மலக்குகள் காபாவை நிர்மாணித்து, அதனை வலம் வந்து இறைவனை வணங்கி வந்தனர். 

அதன் பின் முதல் மனிதர் ஆதம் [அலை] அவர்கள் காபாவை கட்டினார். பின்னர் வெள்ள பிரளயத்தில் நூஹ் [அலை] காலத்தில் காபா சேதமுற்றது. 

நபி இப்றாஹிம் [அலை] அவர்கள், தன் மகன் இஸ்மாயில் [அலை] அவர்களுடன் சேர்ந்து காபாவை மீண்டும் நிர்மாணித்தார்கள். 

பச்சை மாங்காய் ஜூஸ் குடிச்சா வெயில்ல கூட சில்லுன்னு இருக்கலாம் !

பின்னர் "அமாலிகா" எனப்படும் "ஜூர்ஹூம்" குலத்தார் காபாவை  புதுப்பித்தார்கள். அதன் பின்னர் நபி[ஸல்] அவர்களின் ஐந்தாம் தலைமுறை  பாட்டனார் "குஸை பின் கிலாப் காபாவை  கட்டினார். 

நபி[ஸல்] அவர்களுக்கு நபித்துவம் வருவதற்கு முன்பு அவர்களின் 35 ஆம் வயதில் குறைஷிகள் காபாவை  கட்டினர். அதன் பின்னர் அப்துல்லாஹ் பின் ஜூபைர்[ரலி] கட்டினார்.

அதன் பின்னர் கலிபா அப்துல் மலீக் பின் மர்வான் காலத்தில் கவர்னராக இருந்த "ஹஜ்ஜாஜ் பின் யூசுப்" கட்டினார். 

காபாவிற்கு போர்வை போர்த்தி அதை கௌரவப்படுத்திய மன்னன் !

காபா  சதுர வடிவ கட்டிடம், சவூதியில் உள்ள "ஹிஜாஜ்" மாநிலத்தில் உள்ள "மக்கா" என்ற மாநகரை உடைய பகுதியில் காபா  அமைந்திருக்கிறது  

இவ்வூர் சவூதியின் மேற்கு திசையில் செங்கடலிலிருந்து 70 மைல் தொலைவில் கடல் மட்டத்திற்கு 330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 

உலகின் தொப்புள் ஆகவும், உலகின் மைய பகுதியாகவும் இந்நகர் திகழ்கிறது. 

வெயிலால் வரும் சன் ஸ்ட்ரோக்கை தடுப்பதற்கான இயற்கை வைத்தியம் !

அல்லாஹ் காபாவுக்கு   சூட்டிய பெயர்கள் ;

"அல் காபா"

"அல் பைத்"

"பைத்துல்லாஹ்"

"அல் பைத்துல் ஹரம்"

"அல் பைத்துல் அதீக்"

"கிப்லா"

காபாவின் மொத்த உயரம்; 53 அடி (14 மீட்டர்) அதன்  நீளம் மேற்கில் ; 45 அடி, கிழக்கில்; 49 அடி, வடக்கு மற்றும் தெற்கில்; 31 அடி, 

அதன்  தென் கிழக்கு மூலைக்கு" ருக்னுல் ஹிந்த்" வடகிழக்கு மூலைக்கு  "ருக்னே யமானி" வடமேற்கு மூலைக்கு "ருக்னே ஷாமீ" என்றும் பெயர்.

காபாவிற்கு போர்வை போர்த்தி அதை கௌரவப்படுத்திய மன்னன் !

அதன்   தென்கிழக்கு மூலையில் தவாப் செய்யும்  இடத்திலிருந்து 1.10 மீட்டர் உயரத்தில் வெள்ளி வளயத்தில் "ஹஜ்ருல் அஸ்வத்" என்ற சுவனத்திலிருந்து ஆதம்[அலை] அவர்கள் கொண்டு வந்த கல் பதிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 319 இல் ஏற்பட்ட ஒரு சம்பவத்தில் அது உடைந்து போய் பெரியதும். சிறியதுமாக எட்டு துண்டுகளாகின. 

அதற்கு அடுத்து 2.25 மீட்டர் உயரத்தில் காபாவுக்குள்  நுழைவதற்கான வாசல் அமைக்கபட்டுள்ளது. 

இதன் கதவு "தங்கத்தால்" ஆனது, இந்த கதவு வருடத்திற்கு 3 முறை திறக்கப் பட்டு அதன்  உள் பகுதியில் "ஜம் ஜம்" நீரால் சுத்தம் செய்யப்படும்.

பாதாம் பருப்பு மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் !

ஹஜ்ருல் அஸ்வத்துக்கும் காபாவின்   வாயிலுக்கும் இடையேயுள்ள 4 அடி அகலமுள்ள சுவற்றிக்கு "முல்தஜம்" என்று பெயர். 

இந்த சுவற்றில் வலது கன்னத்தையும், நெஞ்சையும் பதித்து துஆ கேட்பின் உடனே ஒப்புக் கொள்ளப்படும்.

700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யமன் நாட்டு மன்னன் "துப்பஉல் அஸத்" என்பவர் தான் முதன் முதலில் காபாவிற்கு  போர்வையை போர்த்தி அதனை  கௌரவப்படுத்தினார். 

காபாவிற்கு போர்வை போர்த்தி அதை கௌரவப்படுத்திய மன்னன் !

அந்தக் கருப்பு போர்வைக்கு "கிஸ்வா" என்று பெயர். அதன் மீது போர்த்தப்பட்ட துணியின் எடை; 670 கிலோ, உயர்ரக பட்டில் ஆனது. 

இதன் மீது தங்கத்தாலும்,வெள்ளியாலும் திருமறை திருவசனம் எழுதப்பட்டுள்ளது. 

காபாவின்  இரு மூலைகளுக்கும் எதிரில் அரை வட்ட வடிவில் 1.32 மீட்டர் உயரமுள்ள சுவருக்கு "ஹதீம்" என்று பெயர். இதற்கு "ஹிஜ்ரே இஸ்மாயீல்" என்ற பெயருமுண்டு.

நம் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள யோகா செய்யுங்கள் ! 

இந்த சுவற்றின் சுற்றளவு 21.57 மீட்டர் நீளமாகும்,ஆரம்பத்தில் இதுவும் காபாவின்  உட்பகுதியாகத் தான் இருந்தது.

"குறைஷிகள்" காபாவை  கட்டிய போது போதிய பணவசதி இல்லாததால் முன்பு இருந்த  அளவை விட அகலத்தில் ஆறரை முழத்தை குறைத்து விட்டார்கள். 

குறைக்கப்பட்ட அப்பகுதியும் காபாவைச்  சேர்ந்ததே! தினமும்  120 ரஹ்மத்துகள் காபாவில் இறங்குகிறது. 

உலகத்திலுள்ள மனிதர்கள் சுற்றி வருவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே கட்டிடம் காபா மட்டும் தான். 

காபாவிற்கு போர்வை போர்த்தி அதை கௌரவப்படுத்திய மன்னன் !
நற் காரியங்களை வலது பக்கமாக துவங்கச் சொல்லும் இஸ்லாம், மிக உயர்ந்த கடமையான காபாவை சுற்றும் போது இடது பக்கமாகச் சுற்றி வரச் சொல்கிறது. 

தொழுகை நேரம் நீங்கலாக, இரவிலும், பகலிலும் மனிதர்கள் காபாவை  சதா வலம் வந்து கொண்டே இருக்கிறார்கள். தொழுகை நேரங்களில் கூட மலக்குகள் காபாவை  "தவாப்" செய்கின்றனர்.

விட்டமின் டி குறைபாடு உயரத்தை பாதிக்குமா?

காபாவைபோல்,அதனைச் சுற்றியுள்ள, "மகாமே இப்ராஹிம்" - "ஜம் ஜம்" - "ஸபா மர்வா" மலைக்குன்று, "மினா" - அரபா" - "முஸ்தலிபா" "ஹிரா" - "தௌர்" - "ஹூதைபிய்யா" போன்றவைகளும்  

சிறப்புக்குரிய இடங்களே  காபாவைக் கண்ட மகிழ்வில் "ஹாஜிகள்" இவற்றையும் கண்டு மகிழ்கின்றனர், 

இறைவா எம் அனைவருக்கும் 

புனித  காபாவை  தவாப்  செய்யும்

நற்பாக்கியத்தை  தந்தருள்வாயாகா

ஆமீன்...!

பகிரி....

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings