கபூர் நாம் தங்கும் முதல் இடம் இது தான் !

0

தீயவர்கள் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள். நெருக்கடியான வாழ்வில் பாம்புகள் தரும் வேதனை!!

கபூர் நாம் தங்கும் முதல் இடம் இது தான் !
இந்த கபூர் நான் தான் தனிமையின் வீடு! நான் தான் புழுதியின் வீடு!  மற்றும் நான் தான் புழுக்களின் வீடு!  

என்று மண்ணறை சொல்லக்கூடிய ஒரு நாள் வரும் நெருக்கடியான வாழ்வில் பாம்புகள் தரும் வேதனை  சகோதர சகோதரிகளே நன்றாக புரிந்து கொள்ளுங்கள்

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவா?

இறந்த பிறகு நாம் சம்பாதித்த செல்வமோ பெற்றெடுத்த குழந்தைகளோ நமக்குத் துணையாக வர மாட்டார்கள் 

மாறாக நாம் இந்த உலகில் செய்த நல்ல காரியங்கள் மட்டும் தான் நம்முடன் துணைக்கு வரும்

அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே கப்றே உனது தங்குமிடம் யா அல்லாஹ் தீயவர்களுக்கான விசாரணை

கெட்ட மனிதன் விசாரணைக்குச் செல்லும் போது அவனுக்குப் பதட்டம் ஏற்படும். 

வானவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு அவன் சரியான எந்த பதிலையும் சொல்ல மாட்டான் பரிட்சையில் தோற்று விடுவான்

ஏன் முதுகு கூன் விழுகிறது? அதை எப்படி தடுப்பது?

கெட்ட மனிதன் நடுக்கத்துடனும், திடுக்கத்துடனும் மண்ணறையில் உட்கார வைக்கப்படுவான். 

எந்தக் கொள்கையில் நீ இருந்தாய்! என்று அவனிடத்தில் வினவப்படும். அதற்கு அவன் எனக்குத் தெரியாது என்று கூறுவான்

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),

நூல் : (இப்னு மாஜா )

இப்படிப்பட்ட படுமோசமான வாழ்வு நமக்கு அமைந்து விடாமல் இருப்பதற்காக நாம் அனைவரும் முயற்சி செய்வதுடன் கப்ரு வேதனையிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு கேட்க வேண்டும்.

(துஆ பின்வருமாறு)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒருவர் தொழுகையில்அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்!!அவை

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபி ஜஹன்னம, வ மின் அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.

(பொருள்: 

இறைவா, உன்னிடம் நான் நரகத்தின் வேதனையிலிருந்தும், சவக் குழியின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும், 

தக்காளி குருமா செய்வது எப்படி?

இறப்பின் சோதனையிலிருந்தும், (பெருங் குழப்பவாதியான மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 1030

சகோதர சகோதரிகளே நீங்கள் யாரும் அல்லாஹ்வைப்பற்றி நல்ல எண்ணம் இல்லாமல் மரணமாக வேண்டாம் 

கப்ரின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கி வைப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். வீடியோ

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings