எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் வேறுபாடு என்ன?





எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் வேறுபாடு என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்.ஐ.வி இருக்கும். எச்.ஐ.வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் வேறுபாடு என்ன?
ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள். 

எச்.ஐ.வி பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் எய்ட்ஸ் தற்போது பரவி வருகிறது.

எய்ட்ஸ் என்றால் என்ன?

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார்.

அதே சமயம் அவர் எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும் போது தான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும்.

எச்.ஐ.வி தொற்றுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா?
எச்.ஐ.வி தொற்றுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா?
எச்.ஐ.வி தொற்றிய வுடன் எந்த அறிகுறியும் இருக்காது. அவர் மற்றவர் களைப் போலவே சாதாரண மாகவே தனது வாழ்க்கையின் கடமைகள் அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார்.

இந்த கால கட்டத்தில் சிறுசிறு நோய்கள் (நோய் தாக்குதல் களுக்கு ஆளாகா தோரைப் போலவே) வந்து போகும்.
இது எல்லோருக்கும் வரும் நோய்தானே என்பதால் எச்.ஐ.வி யால் தாக்கப் பட்டவருக்கு தான் இந்நோயால் தாக்கப் பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டார்.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டிருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம் தான் உறுதி செய்ய முடியும். 

எச்.ஐ.வி யை விலை கொடுத்து வாங்கலாமா?

* பாதுகாப்பற்ற முறையில் ஒருவர் பலருடன் உடலுறவு கொள்தல்.

* பலருடன் உறவு கொள்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு.

* பயன்படுத்திய ஊசிகளை சுத்தப் படுத்தாமல் மீண்டும் பயன் படுத்துவது.

* பரிசோதனை செய்யாத ரத்தத்தை பெற்றுக் கொள்தல்.

பொறுப்பான உடலுறவு பழக்கங்கள்
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் வேறுபாடு என்ன?
1.திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள். அன்பையும் காதலையும் உணர்த்த உடலுறவு தான் ஒரே வழி அல்ல.

2.எச்.ஐ.வி தொற்று இல்லாத இருவர் உடலுறவு கொள்வதால் இருவரும் பாதுகாப்பு பெறுகின்றனர். எச்.ஐ.வி தொற்று அபாயமும் இல்லை.
3.தெரியாத புதியவருடன் உடலுறவு கொள்தல் அல்லது பாலுறவு தொழிலாளருடன் உடலுறவு கொள்ளும் 

ஒவ்வொரு முறையும் ஆணுறை அணிவது ஓரளவுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கும்.

ஊசிகள்
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் வேறுபாடு என்ன?
4.ஒரு முறை பயன்படுத்தக் கூடிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய ஊசிகளை ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டும்.

5.மருத்துவரால் பரிந்துரைக்காத வற்றை ஊசியால் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
6.நீங்கள் எவ்வளவு பாதுகாப்பான வராக தெரிந்தாலும் கூட, நீங்கள் போட்டுக் கொண்ட ஊசியை மற்றவருக்கு அனுமதிக்காதீர்கள்.

ரத்தம்

நோயாளிக்கு ஏற்றப்படும் ரத்தம் பரிசோதிக்கப் பட்டது தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)