2ஜி அலைக்கற்றை ஊழல் தவறான தகவல் என்று மன்னிப்பு கோரிய வினோத் ராய் !

0

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார் உலகை உலுக்கியது. இதுவரை இந்தியா கண்டிராத மிகப்பெரிய ஊழலாக அது பேசப்பட்டது.

2ஜி அலைக்கற்றை ஊழல் தவறான தகவல் என்று மன்னிப்பு கோரிய வினோத் ராய் !

திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலமான 2011-ல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக 

அப்போதைய மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலப்படுத்தினார். 

இந்தியாவில் ஊழல் பெரிய விசயமில்லை என்றாலும் அந்த தொகை இதுவரை கண்டிராத ஒன்றாக இருந்தது. 

உலக தலைவர்கள் வரை, உள்ளூர்வாசிகள் வரை 1.76-க்கு அருகில் போடப்பட்ட பத்து பூஜ்ஜியங்களை பார்த்து வாயடைத்து நின்றனர்.

குளிர் பிரதேசங்களில் மாரடைப்பும், திடீர் மரணமும் ஏற்படுவது ஏன்?

2ஜி வழக்கில் கூட்டணி ஆட்சி நடைபெற்றாலும், அப்போதைய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்த திமுக-வின் ஆ.ராஜா, தூக்கி யெறியப்பட்டார். 

ஊழல் முறைகேட்டுக்கு துணைபோனதாக கலைஞரின் மகள் கனிமொழி மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. 

ஆ.ராஜா, கனிமொழி இருவரும் 2ஜி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் தங்களை பழிவாங்கி விட்டதாக திமுக அலறி துடித்தது. 

2ஜி அலைக்கற்றை ஊழல் தவறான தகவல் என்று மன்னிப்பு கோரிய வினோத் ராய் !

கிராமங்கள் வரை பேசுபொருளாக மாறிய 2ஜி வழக்கு திமுக-வை ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி வீசியதோடு, அடுத்த பத்து ஆண்டுகளில் கோட்டையில் அமரவிடாமல் செய்தது.

ஜி அலைக்கற்றையை தகுதியில்லாத நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்வதற்காக, லஞ்சம் பெற்றதாக, 

காக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்? தெரியாத பதில் !

முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் மீது சிபிஐ குற்றம்சாட்டியது. 

மேலும், கரிம் மொரானி, தொழிலதிபர் ஷாஹித் பல்வா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னாள் நிறுவன இயக்குநர் கௌதம் தோஷி உள்ளிட்ட பலர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அ.ராசா மீதான குற்றச்சாட்டு என்ன?

2ஜி அலைக்கற்றை ஊழல் தவறான தகவல் என்று மன்னிப்பு கோரிய வினோத் ராய் !

கடந்த 2008-ஆம் ஆண்டு எஃப்.டி.எஃப்.எஸ். எனப்படும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற 

கொள்கையின் அடிப்படையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அப்போதைய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த அ.ராசா, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்காக 

அந்நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு விதிகளைமீறி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

குறைந்த கலோரி உள்ள 5 சாண்ட்விச் !

குறிப்பாக, அலைக்கற்றைகளை பெற விண்ணப்பிக்க கடைசி தேதியை அ.ராசா மாற்றியதாகவும், 

கடந்த 2001-ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தின்படி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததாகவும் புகார் உள்ளது.

இதனால், அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பீடு ஏற்பட்டது என சிபிஐயும் , ரூ.1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது என மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (சி.ஏ.ஜி.) அமைப்பும் குற்றம்சாட்டியது.

அ.ராசா அமைச்சராக இருந்த போது அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்ட உரிமம் அனைத்தும் கடந்த 2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 

ஏமாற்றுதல், மோசடி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் அ.ராசா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

சுவையை தூண்டும் மட்டன் கறி செய்வது எப்படி?

கடந்த நவம்பர் 2010-ஆம் ஆண்டு அ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைதாகி சிறை சென்ற அவர், 2012, மே மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

கனிமொழி மீதான குற்றச்சாட்டு:

2ஜி அலைக்கற்றை ஊழல் தவறான தகவல் என்று மன்னிப்பு கோரிய வினோத் ராய் !

ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில், திமுக எம்.பி. கனிமொழி ஆதாயம் அடைந்ததாகவும், 

கலைஞர் தொலைக் காட்சியுடன் அவருக்குண்டான தொடர்பு குறித்தும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் அடாக் குழுமத்தின் சார்பு நிறுவனம் எனவும், 

நீரிழிவின் முதல் எதிரி செர்ரி பழம் !

அதன் மூலம் 14 உரிமங்களை பெற்றதாகவும் சிபிஐ கடந்த 2015-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ரிலையன்ஸ் அடாக் குழுமத்தின் தோசி, சுரேந்திர பிபாரியா, ஹரி நாயர் ஆகியோரும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

எஸ்ஸார் டெலிஹோல்டிங்ஸ், லூப் டெலிகாம்:

2ஜி அலைக்கற்றை ஊழல் தவறான தகவல் என்று மன்னிப்பு கோரிய வினோத் ராய் !

எஸ்ஸார் டெலிஹோல்டிங்ஸ் நிறுவனம், தன் சார்பு நிறுவனமான லூப் டெலிகாம் நிறுவனத்தை பயன்படுத்தி அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?

எஸ்ஸார் நிறுவனத்தை சேர்ந்த ரவி ராவியா, அனுஷ்மன் ரூயா மற்றும் லூப் டெலிகாம் நிறுவனத்தை சேர்ந்த கிரண் கைத்தான், 

ஐபி கைத்தான் ஆகியோர் மீது குற்றச்சதி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2ஜி முறைகேடுகளை அம்பலப்படுத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் பெரிதாக பாராட்டப்பட்டார். 

உலகையே உலுக்கிய 2ஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. போதிய ஆதாராங்களை சமர்ப்பிக்காததால் தோல்வியை தழுவியது. 

இந்த வழக்கில் தீர்ப்பளித்தஓ.பி.சைனி, ஊழல் உண்மையில் நடக்கவில்லை, அப்படி நடந்ததாக பிம்பம் உருவாக்கப்பட்டது. 

மேலும் வழக்கு தொடர்பாகக் கூறப்பட்டவை அனைத்தும் புரளியும் புனைவுமாக இருப்பதால், இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப் படுகிறார்கள் என்று அதிரடியாக தீர்ப்பளித்தார்.

இதையடுத்து வழக்கில் இருந்து ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

அற்புத பயன்கள் நிறைந்த இந்து உப்பு !

2ஜி வழக்கில் அப்போதை பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொடர்பு படுத்தி பேசப்பட்டது. அவர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. 

வழக்கு குறித்து 2014-ல்  ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு அர்னாப் கோஸ்வாமி, கணக்கு தணிக்கையாளர் வினோத் ராயிடம் பேட்டி கண்டார். 

அப்போது பேசிய வினோத் ராய், 2ஜி ஊழல் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரை 

சேர்க்கக் கூடாது என்று தன்னை காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபம் நிர்பந்தித்ததாக வினோத் ராய் கூறியிருந்தார்.

இதையடுத்து வினோத் ராய் தம்மீது அவதூறு பரப்பியதாக சஞ்சய் நிருபம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

பொய்யான அறிக்கை அளித்ததற்காக வினோத் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சஞ்சய் நிருபம் கோரியிருந்தார். 

நீங்க எந்த மாதிரியான வெஜிடேரியன் !

இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வினோத் ராய், சஞ்சய் நிருபமுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். 

2ஜி அலைக்கற்றை ஊழல் தவறான தகவல் என்று மன்னிப்பு கோரிய வினோத் ராய் !

அர்னாப் கோஸ்வாமி எடுத்த பேட்டியில் தான் கூறியதில் உண்மையில்லை என்றும் 

தான் அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கோருவதாகவும் பிரமாண பத்திரத்தில் வினோத் ராய் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாயில் கூட ஆக்சிஜன் உற்பத்தி செய்த நாசா... இனி சுவாசிப்பது மிகவும் எளிது !

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சய் நிருபம், 2ஜி மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 

மீது தவறான அறிக்கை சமர்ப்பித்து அவதூறு கிளப்பிய குற்றத்திற்காக நாட்டு மக்களிடம் வினோத் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)