துருவப் பகுதியில் மணி நேர இரவும், பகலும் ஏன்?

0

பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் (Arctic) என்று அழைக்கப் படுகிறது. ஆர்க்டிக் எனபது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும்.

துருவப் பகுதியில் 24 மணி நேர இரவும், பகலும் ஏன்?
வடதுருவ கரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இப்பகுதி உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப் பட்டது. 

HIV நோயளிக்கு ARV தெரப்பி !

அந்த  இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது. அதற்கு மேல் நீங்கள் எங்கும் போக முடியாது. இந்த ஆர்க்டிக் பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல், கனடா நாட்டின் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, 

வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. ஆனால் ஆர்க்டிக்கில் ஏராளமான பனி மூடிய பெருங் கடல்கள் காணப்படுகின்றன. 

துருவப் பகுதியில் 24 மணி நேர இரவும், பகலும் ஏன்?

அங்கே மரம் என்ற ஒன்று இல்லாத நிரந்தர உறைபனி துந்திரப் பகுதியாகவே உள்ளது.  தரைக்கு கீழும் கூட பனி! வடக்கில் 66.33 அட்ச ரேகைப் பகுதி தான் ஆர்க்டிக் வட்டம் (Arctic circle) எனப்படுகிறது. இங்கு ஓர் அதிசயத்தைக் காணலாம். 

நடுநிசி நேரத்திலும் சூரியன் பளபளவென்று ஒளி வீசி அந்தப் பகுதியையே கொளுத்தி, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பார். 

கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?

இது ஜூலை மாதம் நடக்கும். ஆனாலும் கூட அப்போது அங்கு வெப்பத்தின் அளவு அதிகபட்சம் 10 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். 

ஆர்க்டிக் வட்டப் பகுதிக்குள் குளிர் காலத்தில் சூரியனையே காணமுடியாத 24 மணி நேரமும் இரவும், கோடையில் 24 மணி நேரமும் சூரியன் உள்ள/மறையாத பகலும் காணப்படும்.

நாள் முழுவதும் சூரியன்!

துருவப் பகுதியில் 24 மணி நேர இரவும், பகலும் ஏன்?

வட, தென் துருவ வட்டத்தைச் சுற்றி சுமார் 90 கி. மீ வரையிலும் கோடையில் நடு இரவிலும் சூரியன் ஜொலிக்கிறார். இங்கே சூரியன் ஒரு வட்டத் தட்டு போலத் தெரியும். 

பின்லாந்தின் கால்பகுதி வட ஆர்க்டிக் வட்டத்தில் உள்ளது. எனவே, அதன் வடக்கு முனையில், கோடையில் 60 நாட்கள் சூரியன் அந்த ஊரை விட்டு நகரவே/மறையவே மாட்டார். 
கிச்சனில் பாத்திரம் கழுவும் தொட்டியை மின்ன வைக்க !

நார்வேயின் சவால்பார்ட் (Svalbard) என்ற இடத்தில், ஏப்ரல் 13 முதல் ஆகஸ்ட் 23 வரை (5 மாதங்கள், 10 நாட்கள்) 24 மணி நேரமும் பகலவன் மறையாமலே, அந்த ஊரிலேயே சுற்றிக் கொண்டு காட்சி அளிப்பார். 

அதற்கும் மேல் உள்ள பகுதிகளில் வருடத்தில் பாதி மாதங்கள் சூரியன் நாள் முழுவதும் காட்சி கொடுக்கும். அப்போது அப்பகுதியில் இரவே இருக்காது.

துருவப் பகுதியில் 24 மணி நேர இரவும், பகலும் ஏன்?

துருவப் பகுதிகளில், 60 டிகிரி அட்ச ரேகைகளுக்கு மேல் போய் விட்டால், அதாவது ஆர்க்டிக்கு தெற்கே / அண்டார்க்டிக்காவுக்கு வடக்கே, அந்திமாலை ஒளியைத் தரும். 

வெளிச்சம் இருக்கும். மின் விளக்கு இன்றி படிக்கலாம். இந்த தினங்களை செயின்ட் பீட்ச்பர்க் மற்றும் 

நீங்கள் கட்டிய வீடு பாதுகாப்பாக உள்ளதா?

ரஷ்யாவில் வெள்ளி இரவு தினங்கள் (Silver Night Days) என ஜூன் 11 - ஜூலை 2 வரை, இந்த நாட்களில் எல்லாம், கலாச்சார விழாக்கள் கொண்டாடுவார்கள். 

ஆனால் இங்கு புதிதாக வருபவர்களுக்கு, இரவில் சூரியன் தெரிவதால் உறங்கச் செல்ல கொஞ்சம் பிரச்சினை ஆக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)