ஒரு நாளைக்கு 40 நிமிடம் மட்டுமே இரவு எந்த நாட்டில் தெரியுமா?

0

உலகெங்கிலும் பல நாடுகள் உள்ளன, அவை அவற்றின் சிறப்பு அம்சங்களால் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன. 

ஒரு நாளைக்கு 40 நிமிடம் மட்டுமே இரவு எந்த நாட்டில் தெரியுமா?

எல்லோரும் ஒரு நாள் ஓடிய பிறகு நிதானமான தூக்கத்தை எடுக்க விரும்புகிறார்கள், அத்தகைய சூழ்நிலையில், 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியமாகிறது. 

ஆனால் 40 நிமிடங்கள் மட்டுமே இரவு இருக்கும் ஒரு இடம் உலகில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்.. இது குறித்து தான் இன்று பார்க்கப் போகிறோம்.

நார்வேயில் ஹேமர்ஃபெஸ்ட் (Hammerfest) என்ற நகரத்தில் தான் 40 நிமிடங்கள் மட்டும் இரவு பொழுது இருக்கும். அந்த நகரத்தில் நள்ளிரவ 12:43 மணிக்கு சூரியன் மறையும்.. 

ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம் !

ஆனால் வெறும் நாற்பது நிமிட இடைவெளியில் மீண்டும் உதயமாகும். பறவைகள் இரவில் ஒன்றரை மணிக்கு கூச்சலிட செய்யத் தொடங்குகின்றன. 

இது அங்கு ஓரிரு நாட்களுக்கு நடப்பதில்லை. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் அங்கு 40 நிமிடங்கள் மட்டுமே இரவு நீடிக்கும். 

எனவே இது 'நள்ளிரவில் சூரியனின் நாடு' என்றும் அழைக்கப்படுகிறது. மே முதல் ஜூலை வரை சுமார் 76 நாட்கள் சூரியன் இங்கு மறையாது. 

ஒரு நாளைக்கு 40 நிமிடம் மட்டுமே இரவு எந்த நாட்டில் தெரியுமா?

இந்த காரணத்திற்காக மட்டும் நார்வே பிரபலமானது அல்ல.. உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்று, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என பலப் பெருமைகளை கொண்டுள்ளது. 

இங்குள்ள மக்கள் தங்கள் உடல் நிலையைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள், ஆரோக்கியமாக சாப்பிட விரும்புகிறார்கள்.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருவது நாம் அனைவரும் அறிந்தது தான். அப்படி தன்னை தானே சுற்றி வர 23 மணி 56 நிமிடங்கள் 4 வினாடிகள் பூமி எடுத்துக் கொள்கிறது. 

டெங்கு, சிக்குன் குனியா பயப்பட வேண்டாம்?

இதோடு மட்டுமல்லாமல் புவி சூரியனையும் சுற்றி வருகிறது. புவி சூரியனைச் சுற்ற 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. 

அந்த 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் சூரியனை நோக்கி இருக்கும் பகுதி பகல். மற்ற பகுதி சூரிய ஒளியின்மையால் இரவு ஏற்படுகிறது. 

12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவை சேர்த்து ஒரு நாள். இதனால் தான் இரவு பகல் ஏற்படுகின்றன. 

அதே நேரத்தில், பகல் மற்றும் இரவு காலம் எப்போதும் சமமாக இருக்காது. சில நேரங்களில் பகல் பொழுது அதிகமாக இருக்கலாம்.

சில நேரங்களில் பகல் பொழுது குறைவாகவும், இரவு பொழுது அதிகமாகவும் இருக்கலாம். இது பூமியின் அச்சின் சாய்வால் ஏற்படுகிறது. 

ஒரு நாளைக்கு 40 நிமிடம் மட்டுமே இரவு எந்த நாட்டில் தெரியுமா?

பூமி சுழலும் போது, ​​ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும், இரண்டு புள்ளிகள் உருவாகின்றன, அவை ஒரு நேர் கோட்டில் இணைந்தால், ஒரு அச்சை உருவாக்குகின்றன. 

பூமி அதன் 66 டிகிரி கோணத்தில் சுழல்கிறது, இதன் காரணமாக அதன் அச்சு நேராக இல்லாமல் 23 டிகிரிக்கு சாய்ந்துள்ளது. அச்சின் சாய்வின் காரணமாக, இரவும் பகலும் பெரியதாகவும் சிறியதாகவும் இருக்கும்.

குதிகால் வலியை விரட்டும் வெந்நீர் !

உதாரணமாக, டிசம்பர் மாதத்தில் வட துருவ பகுதியை நோக்கி செல்லும் பொழுது தொடர்ந்து இரவுப் பொழுதின் நேரம் அதிகரிக்கிறது. 

குளிர்காலத்தின் நடுப்பகுதியான டிசம்பர் 22ஆம் தேதி 66 1/2 டிகிரி ஆர்டிக் வட்டத்தை அடையும் பொழுது, சூரியன் முழுமையாக உதிப்பதே இல்லை. 

அதே வேளையில் கோடை காலங்களில் வட துருவப் பகுதியில் இந்த நிலை அப்படியே தலைகீழாகா மாறுகிறது. 

ஒரு நாளைக்கு 40 நிமிடம் மட்டுமே இரவு எந்த நாட்டில் தெரியுமா?

அதாவது, கோடை காலத்தின் நடுவில் ஜூன் 21 ஆம் நாள் ஆர்டிக் வட்டத்தை அடையும் பொழுது சூரியன் மறையாத 24 மணி நேர பகல் பொழுது இருக்கும் .

நார்வேயில் நள்ளிரவு சூரியனும் ஜூன் 21 போன்ற சூழல் தான்.. இந்த நேரத்தில், பூமியின் முழு பகுதியும் 66 டிகிரி வடக்கு அட்சரேகை முதல் 90 டிகிரி வடக்கு அட்சரேகை வரை சூரிய ஒளியில் உள்ளது. 

தலைமுடி கொட்டுவது ஏன்?

இதனால் பகல் நீண்ட பொழுதாகவும், இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். இதனால் தான் இந்த விசித்திரமான நிகழ்வு நார்வேயில் நிகழ்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)