வாயோடு வாய் வச்சு ஊட்டும் வனிதா... திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ் !

0

மகளின் வாயோடு வாய் வைத்து போட்டோ ஷேர் செய்த வனிதாவை நெட்சன்கள் விளாசி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமார்.தன் மகளோட வாயோடு வாய் வச்சு ஊட்டும் வனிதா... திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ் !

இவரின் மூத்த மகளான சந்திரலேகா என்ற வனிதா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்து விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். 

நடிகை வனிதா விஜயகுமார் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார். இரண்டு திருமணம் செய்த வனிதாவுக்கு இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

முதல் கணவருடன் ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகளை பெற்ற வனிதா, இரண்டாவது கணவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்றார்.

விவாகரத்துக்கு பிறகு தனியாக வசித்து வந்த வனிதா டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் காதல் உறவில் இருந்தார். 

தன் மகளோட வாயோடு வாய் வச்சு ஊட்டும் வனிதா... திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ் !

ஆனால் அந்த காதலும் பாதியிலேயே முறிந்து தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார் வனிதா.

இந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. 

இதில் சகப் போட்டியாளர்களுடன் சண்டை சச்சரவு என ஏகப்பட்ட கன்டென்ட்டுகளை கொடுத்தார் வனிதா. 

வனிதா போட்ட சண்டையை பார்த்து சமூக வலைதளங்களில் அவரை சண்டைக் கோழி என விளாசினர் நெட்டிசன்கள்.

வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் காதல் உறவில் இருந்தார்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதில் டைட்டில் வின்னரானார் வனிதா. தொடர்ந்து சமையலுக்கான யூட்யூப் சேனலை தொடங்கினார் வனிதா. 

அதில் எடிட்டராக பணிபுரிந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். ஆனால் நான்கு மாதங்களிலேயே அந்த திருமணம் முடிவுக்கு வந்தது.

பீட்டர் பால் குடிக்கு அடிமையானதால் அவரையும் பிரிந்தார் வனிதா. தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளிலும் சினிமாவிலும் பிஸியாக உள்ளார் வனிதா. 

அவரது நடிப்பில் சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. கொடூரன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார் வனிதா.

பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள வனிதா, தனது போட்டோக்களை அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார். 

அந்த வகையில் சமீபத்தில் தனது மகளுடன் எடுத்த போட்டோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் வனிதா. 

அதாவது வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா அண்மையில் பிறந்த நாளை கொண்டாடினார்.

வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா அனைவருக்கும் தெரிந்த முகம். அம்மாவை போன்றே தைரியமான பெண். 

அம்மாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பார். ஜோவிகாவின் 16வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் வனிதா. 

வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள வனிதா

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் சேர்ந்து நடித்து வரும் பிக்கப் படப்பிடிப்பு தளத்தில் தான் மகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

கேக் வெட்டி அதை மகளுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்டி விட்டிருக்கிறார் வனிதா. 

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ஜோவிகா தான் தனக்கு எல்லாமே என்று தெரிவித்துள்ளார்.

மகளுக்கு இப்படித் தான் வாயோடு வாய் வைத்து கேக் ஊட்டுவதா?  பிள்ளைகளையும் கெடுத்திடாதீங்க வனிதா. 

மகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பழக்கமா இது?. இதன் மூலம் இன்ஃபெக்ஷன் பரவும் என்று தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் பலரும் வனிதாவுக்கும் அவரது மகளுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வனிதாவின் ஆதரவாளர்கள் ஜோவிகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

மகளுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்டி விட்டிருக்கிறார் வனிதா.

மேலும் திடீர் என்று பார்த்தால் ஜோவிகா, லக்ஷ்மி மேனன் மாதிரி இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறிய போது கூட அவருக்கு ஆதரவாக பேசினார். 

ரம்யா கிருஷ்ணன் செய்தது தவறு என்பதை போல பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். 

வனிதா பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்த போதும் கூட தனது அம்மாவுக்கு ஆதரவாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings