தமிழகத்தில் ஒரேநாளில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் !

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

அரசு மருத்துவமனையில் 23 பேரும் தனியார் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். 

2,068 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 20,385 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணைநோய்கள் ஏதும் இல்லாதவர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்குட் பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் நமது வலங்கைமான் நடு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 

வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் !

இன்று 03.08.2021 காலை 9.30  மணி அளவில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  நடைபெற உள்ளது 

ஆகவே கொரோனா தடுப்பூசி போடாத பயனாளர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் இத்தகவலை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொரோனா இல்லாத வலங்கைமான் அமைக்க உதவுவோம்.

தகவல்

Rtn.N.ராஜராஜசோழன்.

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்.