தலிபான்கள் ஆட்சியின் கீழ் வாழ்வதைவிட எப்படியாவது நாட்டை விட்டு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் ஆப்கான் மக்கள் விமான நிலையத்திலேயே காத்துக் கிடக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.3,000... அநியாயத்தின் உச்சம் !

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சி அமையாத போதே அங்கு விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கிறது. 

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நான்கு முதல் ஐந்து மடங்கு உயர்ந்திருப்பதாக ஆப்கானியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

69 நாள் சூரியன் மறையாத தீவு !

காபூல் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும் குடிதண்ணீரின் விலையே பல ஆயிரங்களில் உள்ளது. 

ஒரு பாட்டில் தண்ணீர் இந்திய மதிப்பில் 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல, ஒரு கப் சாப்பாடு 7,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

அதுவும் ஆப்கானிய நாணயத்திற்கு பதிலாக அமெரிக்காவின் டாலர் மதிப்பிலேயே பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.3,000... அநியாயத்தின் உச்சம் !
இதனால் பலரும் குடிப்பதற்கு கூட தண்ணீர் வாங்க முடியாத மோசமான நிலையில் மயத்துடன் விமான நிலையங்களில் காத்திருக்கின்றனர். 

முன்னதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் கடந்த முறையைப் போன்று இந்த முறை கெடுபிடியுடன் இருக்க மாட்டோம் என கூறியிருந்தார்.

ஏ.டி.எம்.-இல் கேன்சல் க்ளிக் செய்தால் என்ன நடக்கும்?

ஆனால் அவர்கள் நடந்து கொள்வதை பார்க்கும் போது அப்படி எதுவும் தெரியவில்லை. ஏனென்றால் இசைக்கு தடை என்கிறார்கள். 

பெண்களை முழுவதும் ஆடை அணிந்தால் தான் கல்வி கூடங்களுக்கு அனுப்புவோம் என்று கூறியுள்ளனர். இதனால் ஆப்கான் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.