மின்னல் வேக மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் உசைன் போல்ட் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார்.  

மின்னல் வேக மனிதர் உசைன் போல்ட்
தடகள வீரர், ஒலிம்பிக் தங்க நாயகன் உசேன் போல்டின் இரட்டைக் குழந்தைகளின் பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அனைத்து காலகட்டங்களிலும், அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்று உலகெங்கும் பரவலாக உசைன் போல்ட் ஏற்றுக் கொள்ளப்பட்டார். 

தடகளப் போட்டிகளில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து பதக்கங்களைப் பதிக்கும் உசேன் போல்ட்டுக்கு லைட்னிங் போல்ட் என்ற அடைமொழியும் உண்டு. 

அதையே தனது மூத்த மகளுக்கு அவர் பெயராகவும் சூட்டினார்.உசைன் போல்ட் வரலாற்றின் மிக அதிக வேக மனிதர் என்று கருதப்படுகிறார். 

இனி சளி பிடிச்சா டாக்டர் கிட்ட போறதுக்கு முன்னாடி இந்த டீயை குடிங்க ! 

நம்ப முடியாத அளவுக்கு, எப்போதும் சீரான மற்றும் அதிவேக பாணி கொண்டவர் உசைன் போல்ட். நாம் நினைத்து பார்ப்பதைவிட வேகமாக ஓடக்கூடியவர் உசைன் போல்ட். 

உசைன் போல்ட் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் !

100 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதல் 10 மீட்டர் தூரத்தை 0.81 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார் உசைன் போல்ட்.

ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 

100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து தன்னிகரற்ற தடகள வீரராக உள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 

2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று அரிய சாதனையையும் படைத்தவர். 

சிறுநீரகம் செயலிழக்கும் என்பதை உணர்த்தும் கிரியேட்டினின் அளவு !

2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

உசைன் போல்ட் – காசி பென்னட்

உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குக் கடந்த வருடம் மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. 

உசைன் போல்ட் – காசி பென்னட் ஆகிய இருவரும் 2014 முதல் காதலித்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 

வித்தியாசமாக அமைந்துள்ள குழந்தைகளின் பெயரை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர். 

பெண்கள் உண்ணக்கூடிய உணவுகளில் முக்கியமான உணவுகள் என்ன?

இதில் ஆண் ஒன்று, பெண் ஒன்று. அவர் தனது குழந்தைகளுக்கு செயின்ட் லியோ போல்ட், தண்டர் போல்ட் எனப் பெயரிட்டுள்ளார்.