கொரோனாவில் இருந்து பாதுகாக்க டபுள் மாஸ்கிங் அணிவது அவசியமான ஒன்றா?

0

கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி நாட்டு மக்கள் நெருக்கடியில் உள்ள நிலையில், கொரோனா வைரஸக் கட்டுப்படுத்த தெரியாமல் உலகம் நாடுகள் திணறி வருகின்றன. 

கொரோனாவில் இருந்து பாதுகாக்க டபுள் மாஸ்கிங் அணிவது அவசியமான ஒன்றா?
வரும் முன் காப்பது மட்டுமே மிகப்பெரிய மருந்தாக இருக்கிறது. அதனால் விரைவாக தடுப்பூசி போட்டு கொள்ள மக்களை மருத்துவர்கள் மற்றும் 

நிபுணர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில் தனி மனித இடைவெளி மற்றும் மாஸ்க் அணிதல் ஆகியவை மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாக இருந்து வருகிறது. 

முன்னெச்சரிக்கையாக அணியும் மாஸ்க், முழுவதுமாக கொரோனாவை தடுக்கும் ஆற்றல் இல்லை என்றாலும் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு கட்டுப்படுத்து பவையாக உள்ளன.

ஒரு மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒரே நேரத்தில் இரண்டு மாஸ்க்குகளை (double masking) பயன்படுத்துவதால், 

டபுள் மாஸ்கிங் - double masking


கொரோனா இரண்டாவது அலை தொற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தொற்றுநோயின் இரண்டாவது அலை பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரட்டை மாஸ்க்குகள் பயன்படுத்துவது காலத்தின் தேவையாகி விட்டது. 

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் பெரும் சவாலாக இருக்கும் நிலையில், டபுள் மாஸ்கிங் கொரோனா பரவலில் இருந்து பெருமளவு காப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

டபுள் மாஸ்கிங் அணிந்திருக்கும் போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவும் வாய்ப்பு மிக குறைந்த அளவு மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

உருமாறிய கொரோனா வைரஸ்

ஒரு மாஸ்க் அணிவதற்கே கஷ்டப்படுகிறார்கள். மருத்துவர்களிடம் பேசும் போது கூட `மூச்சு திணறுகிறது' என்று மாஸ்க்கை கீழே இறக்கி விட்டுக் கொண்டு தான் பேசுகிறார்கள். 

அவர்கள் சொல்வதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது. ஏனென்றால், இவர்களில் பலர் மூக்கால் இல்லாமல் வாயால் தான் மூச்சு விடுகிறார்கள். 

அப்படிப்பட்டவர்களுக்கு மாஸ்க் போட்டால் மூச்சுத் திணறுவது போல தான் உணர்வார்கள். ஆனால், மருத்துவ ரீதியாக இது உண்மை கிடையாது. 

ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களும் டபுள் மாஸ்க் அணிந்து கொள்ளலாம். அல்லது என் 95 மாஸ்க் அணிந்து கொள்ளலாம்.

பொதுமக்கள் என் 95 மாஸ்க் அணிந்து கொண்டால் இன்னொரு மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் இல்லை. 

மாஸ்க் போட்டுக் கொண்டால் மூச்சுத் திணறுகிறது

ஆனால், துணியாலான மாஸ்க் அணிகிறீர்கள் என்றால், கூடுதல் பாதுகாப்புக்காக இந்நேரத்தில் இரண்டு மாஸ்க் போட்டுக் கொள்ளலாம். 

சிலர் ஒரு மாஸ்க் போட்டாலே மூச்சுவிடக் கடினமாக இருக்கிறது என்பார்கள். உண்மை என்ன வென்றால், மாஸ்க் போட்டுக் கொண்டால் மூச்சுத் திணறுகிறது என்பதற்கு முக்கால்வாசி காரணம் மனத்தடைதான். 

அவர்கள் அப்படி நினைத்துக் கொள்வதால் தான் அப்படி உணர்கிறார்கள் என்று ஆஸ்துமா மருத்துவரான ஶ்ரீதரன் கூறுகிறார்.

டபுள் மாஸ்கிங் பலன் கொடுக்கிறதா? : 

டபுள் மாஸ்கிங் பலன் கொடுக்கிறதா? :

டபுள் மாஸ்கிங் தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பான CDC இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. 

ஒரு மாஸ்க் மீது மற்றொரு மாஸ்க் அணிந்திருக்கும் போது, தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் எனக் கூறியுள்ளது. 

மேலும், கொரோனா தொற்றும் விகிதமும் மிக குறைவான அளவு மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ள சி.டி.சி, 

85 முதல் 95 விழுக்காடு டபுள் மாஸ்கிங் தொற்றில் இருத்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளது. 

எவ்வளவு நேரம் டபுள் மாஸ்க் அணியலாம்?

எவ்வளவு நேரம் டபுள் மாஸ்க் அணியலாம்?

வீட்டை விட்டு வெளியே இருக்கும் நேரம் முழுக்க டபுள் மாஸ்க் அணிந்திருக்கலாம். வீட்டுக்குள் இருந்தால் அவசியமில்லை. 

ஒரு வேளை வீட்டுக்குப் பொருள்களை டெலிவரி செய்ய வெளிநபர் யாராவது வந்தால், அந்த நேரத்தில் நீங்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். அவர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

டபுள் மாஸ்க் எப்படி அணிய வேண்டும் : வீட்டில் தயாரிக்கப்பட்ட துணி வகைகளான மாஸ்க்குகளையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். 

மருத்துவர்களின் அறிவுரைப்படி, மருத்துவ மாஸ்க் ஒன்றை அணிந்து, அதற்கு மேல் துணியினால் ஆன மாஸ்க்கை அணிவது சிறந்தது எனக் கூறுகின்றனர். 

துணியினால் ஆன மாஸ்க்கை அணிவது சிறந்தது

இரண்டு மாஸ்க்குளை அணியும் போது முறையாக வாய் மற்றும் மூக்கு பகுதிகள் முழுவதுமாக மூடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

ஒன்றை மேலும், மற்றொன்றை கீழுமாக தளர்த்தியும், ஒன்றன் மீது ஒன்றாக அணிந்து கொள்ளலாம். 

மாஸ்க் அணிவது மட்டுமே முழுவதுமான பாதுகாப்பை வழங்கி விடாது. ஏற்கனவே கூறியது போல் முறையாக அணிய வேண்டும். 

இரண்டு மாஸ்க்குகளும் தரமானதாக இருக்க வேண்டும். இரண்டு தனித்தனி மாஸ்க்குகள் 56.6 விழுக்காடு மட்டுமே பாதுகாப்பை வழங்குவதாக தெரிவித்துள்ள சி.டி.சி, 

இரண்டு மாஸ்க்குகள் ஒன்றாக தைக்கப் பட்டிருப்பவை 85.4 விழுக்காடு பாதுகாப்பை கொடுப்பதாக கூறியுள்ளது. 

எப்படி டபுள் மாஸ்கிங் நம்மை பாதுகாகிறது? : 

எப்படி டபுள் மாஸ்கிங் நம்மை பாதுகாகிறது? :

மருத்துவ ரீதியில் கூறினால், கூடுதலான மாஸ்க் அணியும் போது கிருமிகள் தொற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்தி, நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து பெருமளவு தடுக்கிறது. 

கூடுதலான மாஸ்க் அணிந்திருக்கும் போது பரவும் தொற்றின் வீரியமும் குறைவான அளவில் மட்டுமே இருக்கும் எனத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், 

கூட்டம் நெரிசல் மிக்க இடங்கள், தொற்று அபாயம் அதிகம் இருக்கக் கூடிய பகுதிகளில் இது நல்ல பலனைக் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். 

பொது போக்குவரத்து, காற்றோட்டம் குறைவாக இருக்கும் பகுதி, சந்தை பகுதிகள், மருதுதவமனை போன்ற பகுதிகளில் கூடுதலான டபுள் மாஸ்கிங் அவசியமாகும். 

டபுள் மாஸ்கிங் அணிந்திருக்கும் அதே நேரத்தில் அடிப்படை வழிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

மிகவும் கடினமாக அணிந்து கொள்ளாமல் மூச்சு விடுவதற்கு ஏற்ற வகையில் சரியான முறையில் அணியும் போது டபுள் மாஸ்கிங், 

வைரஸ் தொற்றில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

எப்படி மாஸ்க்கை தேர்வு செய்ய வேண்டும்? : 

எப்படி மாஸ்க்கை தேர்வு செய்ய வேண்டும்? :

பல அடுக்குகளை கொண்ட மாஸ்க்குகள் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

அதனால், இரண்டு, மூன்று லேயர்கள் இருக்கும் மாஸ்க்குகளை தேர்தெடுத்து, உங்களுக்கு சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதி செய்து அணிய வேண்டும். 

வெளிப்புறத்தில் துணி மாஸ்க்கும், உட்புறத்தில் சர்ஜிக்கல் மாஸ்க்கும் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ள மாஸ்க்குகளை வாங்குவது நல்லது. 

நீங்கள் அணியும் டபுள் மாஸ்க் உங்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவு அல்லது அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. 

குறிப்பாக, சுவாசிப்பதற்கு தடையாக இருக்கும் மாஸ்க்குகளை தேர்தெடுக்க வேண்டாம். 

தவிர்க்க வேண்டியது என்ன? : 

தவிர்க்க வேண்டியது என்ன? :

டபுள் லேயர் மாஸ்க்குகள் பொருத்தமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், இரண்டு மாஸ்க்குகளும் ஒரே துணியினால் உருவாக்கப் பட்டவையாக இருக்கக் கூடாது. 

சர்ஜிக்கல் மாஸ்க்கு பாதுகாப்பு தருபவையாக இருந்தாலும், ஒரு லேயர் மட்டுமே அவை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

அழுக்காக இருக்கும் மாஸ்க்குகள், கீழே கிடக்கும் மாஸ்க்குகள் மற்றும்  ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகளை உபயோக்கிக்க கூடாது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)