6 நாய்கள் பாதுகாக்கும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம்... ஒரு கிலோ 2.7 லட்சம் !

0

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் ராணி- சங்கல்ப் பரிஹார் தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பெரிய தோட்டம் ஒன்றை வைத்து பராமரித்து வருகின்றனர். 

உலகின் விலையுயர்ந்த மாம்பழமா மியாசாகி உண்மை என்ன?
அதில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்களை விளைவிக்கப்பட்டு வருகின்றன. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு ரயிலில் சென்ற போது ஜபல்பூர் தம்பதியுடன் பயணித்த ஒருவர் இரண்டு மாமரம் கன்றுகளை  வாங்கியுள்ளார். 

அவர் தான் வாங்கிய மாமரகன்ரில் ஒன்றை இந்த ஜபல்பூர் தம்பதியிடம் கொடுத்துள்ளார்.  இவர்கள் அதை வீட்டின் அருகில் உள்ள தோட்டதில் வைத்து வளர்த்துள்ளனர்.

இது மரமாக வளர்ந்து சமீபத்தில் சிவப்பு நிறத்தில் பெரிய அளவில் மாம்பழங்கள் காய்த்துள்ளன. மற்ற மாமரங்களை போன்று மஞ்சள் கலந்து சிகப்பு நிறத்தில் பழங்களை தரும் என எண்ணினர். 

ஆனால், அந்த மாமரத்தின் பழங்கள் ரூபி ரெட் கலரில் இருந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர். 

இந்த சூழலில் தான் சங்கல்ப் பரிஹாருக்கு பிரமிப்பூட்டும் தகவல் ஒன்று கிடைத்தது. இதற்கு முன் இது போன்று பார்க்கவில்லையே என ஆச்சர்யம் அடைந்துள்ளனர். 

அருகில் உள்ளவர்களிடம் இது குறித்து கேட்க, உரிய விடை கிடைக்கவில்லை. இறுதியாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அது மியாசாகி மாம்பழங்கள் எனத் தெரிய வந்தது.

மியாசாகி மாம்பழத்தின் தாயகம் ஜப்பான்

இந்த மாம்பலம் மிகவும் அரிய வகை மாம்பழமாம்.  ஜப்பான் நாட்டை சேர்ந்த மியாசாகி என்ற அரிய வகை மாம்பழங்கள் தான் தங்கள் தோட்டத்தில் காய்த்திருந்தது தெரிய வந்தது. 

மியாசாகி மாம்பழத்தின் தாயகம் ஜப்பான். அங்கிருக்கும் மியாசாகி நகரத்தில் மாமரங்கள் விளைவதற்கான வெயில், மழை, மண்வளம் அனைத்தும் இருப்பதால், 

அங்கு தான் இந்த பர்பிள் நிற மாங்காய் காய்க்கிற மாமரங்கள் அதிகம் விளைகின்றன. விளைவு, அந்த நகரத்தின் பெயராலேயே இந்த மாம்பழங்களை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

1970-களின் இறுதியிலோ, 80-களின் இறுதியிலோ தான் இந்த வகை மாமரங்கள், மியாசாகியில் விளைய ஆரம்பித்தன என்கின்றன ஜப்பானின் உள்ளூர் பத்திரிகைகள். 

காயாக இருக்கையில் முக்கால்வாசி பர்பிள் நிறத்திலும் நுனிப்பகுதியில் கொஞ்சம் பச்சை நிறமும் சேர்ந்து இருக்கிறது. 

இதை பார்ப்பதற்குக் கொள்ளை அழகாக இருக்கிற இந்த மியாசாகி, பழுக்கும் போது சிவப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது.

சூரியனின் முட்டை

அதனால், இந்த மாம்பழத்துக்கு `சூரியனின் முட்டை’ என்கிற பட்டப் பெயரும் இருக்கிறது. இவை உலகில் அதிக விலை கொண்டவை. 

சர்வதேச சந்தையில் இந்த மாம்பழங்கள் ஒரு கிலோ 2.70 லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. 

அதிலும் ஒரு மாம்பழம் 21 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது.ஒரு மாம்பழம் சுமார் 350 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். 

அப்படியென்ன சிறப்பு இந்த மாம்பழத்தில் என்று தேடினால், வழக்கமான மாம்பழங்களைப் போலவே இதிலிருக்கிற பீட்டா கரோட்டின் கண்களுக்கு மிகவும் நல்லது என்கிறது கூகுள்.

இதை அறிந்த அருகில் உள்ளவர்கள் மாம்பழங்களை திருடிச் சென்று விட்டனர். இதனால் ராணி- சங்கல்ப் பரிஹார் தம்பதி மாம்பழங்களை திருடாமல் இருக்க நான்கு பேரை காவலுக்கு நிறுத்தியுள்ளனர். 

அத்துடன் 6 நாய்களையும் காவலுக்கு வைத்துள்ளனர். தற்போது மரத்தில் ஏழு காய்கள் உள்ளன. 

6 நாய்கள் பாதுகாக்கும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம்

பழமாகிய பின்னர், மேலும் மரங்களை உருவாக்குவதற்காக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என அந்த தம்பதி தெரிவித்துள்ளது. காவல் போடும் அளவிற்கு அந்த மாம்பழத்தில் விசயம் உள்ளது. 

மியாஜாகி என அழைக்கப்படும் இந்த வகை மாம்பழங்களில் தோற்றம் ஜப்பானின் மியாசாகி நகரமாகும். வேறெங்கும் இந்த மாமரம் கிடையாது.

அதிக விலை மதிப்புள்ள மாம்பழங்களை வாங்க சங்கல்ப் பரிஹாரை பலரும் அணுகி வருகின்றனர். 

மேலும் அவரது தோட்டத்திலுள்ள மாமரக் கன்றுகளை வாங்கி விட வேண்டும் என்றும் பலர் மும்முரம் காட்டி கொண்டிருக்கின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)