கும்பகோணம் நகராட்சி மற்றும் கிஸ்வா இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் கிஸ்வா நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம் !
கும்பகோணம் நகராட்சி மூலம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி காந்தி நகரில் சிட்டி யூனியன் வங்கி அருகே அமைந்துள்ள மஸ்ஜிதே நூர் பள்ளிவாசலில், 

இன்று 04-06-2021 காலை 9.30 மணிக்கு தடுப்பூசி முகாம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி க. அன்பழகன் எம்.எல்.ஏ. அவர்களின் ஏற்பாட்டில் முகாம் நடைப்பெற்றது. 

கும்பகோணம் கிஸ்வா நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம் !

முகாமில் கிஸ்வா தலைவர் கே.ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் அ.சிராஜுதீன், 

திட்ட தலைவர்கள் ஜே.ஜாஹிர் உசேன், எம். ஆசாத் அலி, மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் செயலாளர் அல்லாபக்ஸ் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

முகாமினை நகராட்சி ஆணையர் திருமதி. லட்சுமி தொடங்கி வைத்தார். 

கும்பகோணம் கிஸ்வா

முகாமில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பெயர் பதிவு செய்ய அனைத்து  சமுதாய மக்களுக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.

தடுப்பூசி செலுத்தும் பயனாளிகளுக்கு அசல் ஆதார் அடையாள அட்டை எடுத்து வந்தவர்களுக்கு நகல் (ஜெராக்ஸ்) இயந்திரம் மூலம் நகல் எடுத்து பதிவு செய்யப்பட்டது. 

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி

மேலும் குடிநீர் வசதி, பள்ளிவாசலில் பெண்கள் அமர தனி இடவசதி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முகாமில் அதிகமான பெண்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டது விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்ததது குறிப்பிடத்தக்கது.

முகாமில் கிஸ்வா நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீநகர் காலனி மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல்

கும்பகோணம் கொரோனா தடுப்பூசி முகாம் !

கொரோனா தடுப்பூசி முகாம் !

கிஸ்வா நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம் !