நோய் எதிர்ப்பு சக்தியை பெற செய்ய வெண்டியதும், செய்யக்கூடாததும் !

0

கடந்த ஒரு வருடமாக நோய் எதிர்ப்பு சக்தி குறித்த தேடல்கள் இணையத்தில் அதிகரித்துள்ளன. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

நோய் எதிர்ப்பு சக்தியை பெற செய்ய வெண்டியதும், செய்யக்கூடாததும் !

அதே நேரம், லாக்டவுனில் வீட்டில் முடங்கியிருந்த பலருக்கும் உடல் எடை கூடியுள்ளது. உடல் உழைப்பு இல்லாததால் உடல் எடை கூடியதற்கு முக்கிய காரணம் என புலம்புகின்றனர். 

உடல் எடையை குறைப்பதற்காக உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல என எச்சரிக்கும் மருத்துவர்கள், 

ஊட்டச்சத்து மிக்க உணவு சரியாக எடுத்துக் கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும், உடல் எடையும் கூடாது என தெரிவித்துள்ளனர். 

பொதுவா ஒரு நபருக்கு 95-100% வரை ஆக்சிஜன் அளவு இருந்தால் அதில் சிக்கல் எதுவும் இல்லை. 

94% க்கும் குறையும் போது அதை மருத்துவர்கள் மிகவும் சிக்கலான விஷயமாகப் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். இதனால் அந்த நபருக்கு செயற்கையான ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை பெற செய்ய வெண்டியதும், செய்யக்கூடாததும் !

இது போன்ற சமயங்களில் இயற்கையாகவே உணவுப் பொருட்களின் மூலம் ஆக்சிஜன் அளவை தக்க வைத்துக் கொள்வதற்கும் மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். 

PF என்றால் என்ன? தொிந்து கொள்ள

அந்த வகையில் ஆக்சிஜன் அளவை உட்கிரகித்துக் கொள்ளும் திறன் கொண்ட (Oxygen radical absorption capacity) orac உணவு வகைகளை மருத்துவர்கள் தற்போது பரிந்துரைத்து வருகின்றனர்.

அதில் கவனிக்க வேண்டிய மற்றும் திருத்திக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி இதில் பார்ப்போம்.

திராட்சை மற்றும் நாட்டு மாதுளை விதை

திராட்சை மற்றும் நாட்டு மாதுளை விதை

அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை, திராட்சை மற்றும் நாட்டு மாதுளை விதைகள். நம் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவு (ORAC -Oxygen Radical Absorbance Capacity) 5,000 வரை இருக்க வேண்டும். 
உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்க !

பிறந்தது முதல் 15 வயது வரை, உடலில் தேவையான ORAC இருக்கும். அதற்குப் பின்னர், உடலுக்கு நாம் தான் இதை வெளியிலிருந்து கொடுக்க வேண்டும். 

திராட்சை மற்றும் மாதுளை விதைகளின் மூலம், இந்த ORAC அளவை நிரம்பப் பெறலாம். நாள் ஒன்றுக்கு 4 விதைகள் என எடுத்துக் கொள்ளலாம்.

பாதாம்

பாதாம்

பாதாம், முந்திரி, பிஸ்தா இவற்றை, நாள் ஒன்றுக்கு ஒவ்வொன்றிலும் மூன்று சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதுவும் நம் உடலில் ORAC அளவை அதிகரிக்கும்.

நாட்டு மாதுளை

நாட்டு மாதுளை

நாட்டு மாதுளை ஜூஸ் பருகுவது, நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக மேம்படுத்தும். ஆரஞ்சு, திராட்சை ஜூஸும் பருகலாம். 
ஸ்டெம் செல்ஸ் சிறப்பு விழிப்புணர்வு பார்வை !
சிலருக்கு இவை சளியை ஏற்படுத்தும் என்றால், அவர்கள் தவிர்க்கலாம்.

சீதா பழம்

சீதா பழம்

சீதா பழம் மிக சத்துள்ள பழம் என்பது பலரும் அறியாதது. இதை எடுத்துக் கொள்வது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை பேஸ்ட்டாக அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் சாதாரண தண்ணீரில் (வெந்நீர் அல்ல) சேர்த்து, 

அதில் சில சொட்டுகள் லெமன், கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் மிக நல்லது. 

நீராவிக் குளியல் உள்ள சிறப்புகள் !

இதை காலை அல்லது மாலை 4 மணிக்குள் எடுத்துக் கொள்வது நல்லது. மாலை 6 மணிக்கு மேல் எடுத்துக் கொண்டால் சளி பிடிக்கும் வாய்ப்புள்ளது என்பதால் தவிர்க்க வேண்டும்.

பருப்பு உணவுகள்

பருப்பு உணவுகள்

பட்டாணி, கொண்டைக்கடலை, பீன்ஸ், சோயா பீன்ஸ், காராமணி போன்ற தாவரங்கள் ஆக்சிஜனை அதன் வேர் முடிச்சுகளில் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மைக் கொண்டவை. 

மான் வயிற்றில் இருந்த 4 கிலோ பிளாஸ்டிக்

இதனால் இந்த பருப்பு வகைகளும் ஆக்சிஜனை உட்கிரகித்துக் கொள்ளும் திறன் கொண்டவையாக இருக்கிறது.

சுக்கு, மிளகு

சுக்கு, மிளகு

சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் இவற்றை (சுத்தப் படுத்தியவை) சம அளவில் எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து கசாயம் செய்து குடிப்பது, உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.

மசாலா பொருட்கள்

மசாலா பொருட்கள்

கிராம்பு, மஞ்சள், பட்டை, சீரகம், சோம்பு, கருவேப்பிலை, பூண்டு, இஞ்சி, துளசி, எலுமிச்சை போன்றவற்றில் ஆக்சிஜனை உட்கிரகித்துக் கொள்ளும் திறன் அதிகம் உள்ளது. 

‘முலை வரிச்சட்டம்’ பற்றி தெரியுமா?

இந்தப் பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்தோ அல்லது சிலவற்றை காய்த்து குடிக்கும் முறையிலோ பயன்படுத்தும் போது ஆக்சிஜன் அளவை உயர்த்த முடியும்.

சளிக்கான சிறப்பான வைத்தியம் இது.

தேவையானவை

ஒரு கைப்பிடி தூதுவளை,

ஒரு கைப்பிடி துளசி,

ஒரு வெற்றிலையுடன் ஒரு சிறிய துண்டு சுக்கு,

அரை டீஸ்பூன் மிளகு,

செய்முறை

சளிக்கான சிறப்பான வைத்தியம் இது.

ஒரு டீஸ்பூன் முழு மல்லி சேர்க்கவும் (திப்பிலி இருந்தால் அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்). இவை அனைத்தையும் இரண்டு டம்ப்ளர் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். 
மீன் மிளகாய் மாசாலா செய்முறை !

இதில், பெரியவர்கள் ஒரு டம்ளர், 15 வயது வரையுள்ள குழந்தைகள் அரை டம்ளர், 8 வயதுக்குக் கீழான குழந்தைகள் 10 மிலி என, 15 நாள்களுக்கு ஒரு முறை பருகி வரவும். 

நாள்பட்ட சளியையும் வெளியேற்றி விடும். மேலும், நுரையீரலை பலப்படுத்தி சளி தங்காமல் காக்கும்.

குப்பைமேனி

குப்பைமேனி

ஒரு கைப்பிடி குப்பைமேனியை எடுத்து அலசி, அதோடு 4 மிளகு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுக்கவும். இதை மூன்று நாள்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரவும். 

லெமன் பெப்பர் மீன் வறுவல் செய்முறை !

இதைக் குடித்த பின்னர் நிச்சயம் வாந்தி வரும் பயப்பட வேண்டாம். அது சளி வெளியேற்றமே. 

மேலும், குப்பைமேனியால் குப்பையான மேனியும் அழகுபெறும். பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும்.

இது போன்ற உணவுகளை அன்றாட உணவிலோ அல்லது தனித்தனியாகவோ பயன்படுத்தும் போது கொரோனா நேரத்தில் ஆக்சிஜன் அளவை தக்க வைத்துக் கொள்வதற்கும், 

சுவாச உறுப்புகளை திறன் கொண்டதாக மாற்றிக் கொள்வதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

இனி, வீட்டு மருத்துவத்தில் செய்யக் கூடாதவற்றைப் பார்ப்போம்.

வீட்டு மருத்துவத்தில் செய்யக் கூடாதவற்றைப் பார்ப்போம்.

நாம் அனைவரும் பரவலாக கபசுரக் குடிநீர் எடுத்துக் கொள்கிறோம். இதை எடுத்துக் கொள்வதிலும் ஒரு முறை இருக்கிறது. கபசுரக் குடிநீரை தொடர்ந்து மூன்று நாள்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் 20 நாள்கள் இடைவெளி விட்ட பின்னரே, மீண்டும் தொடர்ந்து 3 நாள்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 

நினைவிருக்கட்டும், மருந்தும் விருந்தும் மூன்று நாள்களுக்குத் தான். எந்த மருந்தையும் 3 நாள்கள், மருத்துவர் பரிந்துரையின் பேரில் அதிக பட்சமாக 5 நாள்களுக்கு மேல் தொடர்ச்சியாக எடுக்கக் கூடாது.

குழந்தைகள் 10-15 மிலி அளவும், பெரியவர்கள் 30-50 மிலி அளவும் எடுத்துக் கொள்ளலாம். இந்த அளவை மீறி அதிகமாக எடுத்துக் கொள்ளும் போதும், 

பரிந்துரைக்கத் தக்கதைவிட குறைந்த இடைவெளியில் எடுத்துக் கொள்ளும் போதும் கல்லீரல் பாதிப்படையும் வாய்ப்பு ஏற்படலாம்.

இஞ்சி சேர்த்த ஜூஸ் வகைகளை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இது அல்சர் பிரச்னையை ஏற்படுத்தலாம்.

கண்களின் கீழ் வரும் வீக்கத்தை தடுக்க எளிய வழிமுறைகள் !

இஞ்சியை எப்போதும் தோல் நீக்கிய பின்னரே பயன்படுத்த வேண்டும். அதிமதுரத்தை கடையில் வாங்கி வந்த பின்னர், பாலில் அவித்து எடுத்து, உலர வைத்த பின்னரே பொடியாக்கிப் பயன்படுத்த வேண்டும்.

மஞ்சள் தூள் நல்லது. ஆனால், கடையில் ரெடிமேடாக விற்கும் பிரிசர்வேட்டிவ்கள் கலந்த மஞ்சள் தூளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 

கடையில் விரலி மஞ்சள் வாங்கி, அரைத்து, அந்தத் தூளைப் பயன்படுத்தவும். சரும நோய் உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றை தவிர்க்க வேண்டும். 

சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள்

சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் முருங்கைக் கீரையைத் தவிர்க்க வேண்டும். எதை எடுத்துக் கொண்டாலும் அளவு என்பது மிக முக்கியமானது. 

மலேரியா காய்ச்சலுக்கு புதிய மருந்து !

உங்கள் வயது, உடல்நிலைக்கு ஏற்ற அளவு குறித்து, அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

அதே போல, உணவும் மருந்தும் ஒருபுறம் இருக்க, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் அவசியம். அதற்கு, மூச்சுப் பயிற்சி நல்ல பலனைக் கொடுக்கும்.

மேற்சொன்னவை எல்லாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், நோய் வராமல் தற்காக்கவுமே. 

லெமன் பெப்பர் மீன் வறுவல் செய்முறை !

உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை பெற்றே மருந்துப் பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings