திருவண்ணாமலை அருகே பேய் ஓட்டுவதாக கூறி மூன்று பெண்கள் 7 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவனுக்கு பேய் பிடித்ததாக நினைத்த அவரது உறவினர்கள் பேயை விரட்டுவதாக கூறி, மூன்று பெண்கள் அந்த சிறுவனை சரமாறியாக அடித்து கொடுமைப் படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் கதறி அழுதபோதும், தொடர்ச்சியாக அந்த பெண்கள் அடித்ததால் மயங்கி விழுந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுவனை அடித்து கொலை செய்த கேவி குப்பத்தை சேர்ந்த திலகவதி, பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோர் மீது அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பேய் பிடித்ததாக கூறி இரவு முழுவதும் 3 பெண்களும் அடித்தே கொலை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதயத்தை ஆரோக்கியமா வச்சுக்கணுமா?
போலீசார் நடத்திய விசாரணையில், "வலிப்பு வந்து சிறுவன் இறந்து விட்டதாக கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் வாக்குமூலம் அளித்திருப்பது" அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.