வாழ்வாதாரத்தை இழந்த மாற்றுத்திறனாளி பெற்றோர்கள் !

0

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது 

வாழ்வாதாரத்தை இழந்த மாற்றுத்திறனாளி பெற்றோர்கள் !
இந்நிலையில் இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக் குறியாகியுள்ளது 

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் நிலை தான் எண்ணிலடங்கா சோகத்தை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தர்மகோவில் தெருவைச் சேர்ந்தவர் மங்கள சுந்தரி. 

இவருடைய கணவர் பூமாலை இருவரும் மாற்றுத் திறனாளிகள் இவர்களுக்கு ஹரிணி என்கிற எட்டு வயது பெண் குழந்தை உள்ளார்.

இந்நிலையில் மங்கள சுந்தரி தனது தாய் லதாவுடன் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

மொய் விருந்து கணக்கை பதிவு செய்ய ‘மொய் டெக்’ சாப்ட்வேர் !

இந்நிலையில் மங்கள சுந்தரியின் தாயார் லதா வீட்டு வேலைக்கு சென்று வந்து அவர், கொண்டு வரும் சிறிய வருமானத்தை நம்பியே இந்த 4 பேரும் இவ்வளவு ஆண்டு காலமாக குடும்பத்தை நடத்தி வந்தனர். 

தற்போது இவர்களுடைய வாழ்க்கையை இந்த ஊரடங்கு முற்றிலும் முடமாக்கி உள்ளது. 

கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக வீட்டு வேலைக்கு வர வேண்டாம் என லதாவை அவர் வேலை செய்த வீட்டு உரிமையாளர் தெரிவித்து விட்ட காரணத்தினால், 

PF என்றால் என்ன? தொிந்து கொள்ள

அன்றாட உணவுத் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் மிகுந்த கஷ்டத்துடன் நாள்தோறும் வாழ்க்கையை நடத்தி வருவதாக கண்ணீர் மல்க மங்கள சுந்தரி தெரிவிக்கிறார்.

மேலும் கடந்த மூன்று மாத காலமாக தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை செலுத்தாத காரணத்தினால் வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்து விட்டனர். 

இனி எங்கு செல்வது என்று தெரியாமல் மிகுந்த மன வேதனையுடன் மங்கலசுந்தரி குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். 

பர்கர் பற்றிய எச்சரிக்கை தகவல் !

தன்னுடைய குழந்தை பசியால் துடிப்பதை கண்டு மன வேதனையுடன் காணப்படுகிறார் மங்கள சுந்தரி. 

மேலும் தன்னுடைய தாய் மங்கள சுந்தரி அருகில் எங்கும் செல்ல வேண்டு மென்றால் 8 வயது சிறுமி ஹரிணி மூன்று சக்கர வாகனத்தில், 

தனது தாயை வைத்து தள்ளும் சம்பவம் பார்க்கும் அனைவரும் கண்களையும் கலங்க வைக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

அரசு ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு நபர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 

நீர் குளியல் உள்ள சிறப்புகள் !

எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் மங்கள சுந்தரிக்கு ஏதாவது ஒரு அரசு வேலை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)