கர்ப்பமான மஹத் மனைவியின் வைரலாகும் புகைப்படங்கள் !

0

சிம்பு நடித்த வல்லவன் படத்தில் சிம்புவின் நண்பனாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் மகத். அதனை தொடர்ந்து மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

கர்ப்பமான மஹத் மனைவியின் வைரலாகும் புகைப்படங்கள் !
இவர் துபாயில் வசித்து வந்த தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார். 

இதனால் வெளியே இருந்த அவரது காதலியான மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா மகத்துடனான காதலை முறித்துக் கொள்வதாக கூறினார். 

பின்னர் மும்தாஜிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப் பட்டார் மகத்.

அதனைத் தொடர்ந்து கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா மற்றும் ’இவன் உத்தமன்’ ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி யுள்ளார். 

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தனது காதலியை சமாதானப்படுத்திய மகத், அவருடன் மீண்டும் காதலை தொடர்ந்தார். 

கர்ப்பமான மஹத் மனைவி
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். 

இதனிடையே தனது மனைவி பிராச்சி கர்ப்பமாக இருப்பதாக நடிகர் மகத் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வந்தனர்.

மேலும் சமீபத்தில் பிராச்சிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துக் கொண்டனர். 

இந்த வளைகாப்பு வீடியோவியும் மகத் ஷேர் செய்திருந்தார். இதனிடையே பிராச்சி பிரசவ கால யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியானது.

பிரசவ கால யோகா

அதில் அவருடன் மகத் இருந்து கவனித்து கொள்ளும் காட்சிகளை காண முடிந்தது. 

இந்த நிலையில் தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் பிராச்சி போட்டோசூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 

அதி, கருப்புநிற டைட் உடையில் உள்ளார், மஹத்தும் மனைவிக்கு மேட்சாக கருப்பு நிற உடையில் உள்ளார். 

இருவரும் அழகாக சிறிது கொண்டிருக்கும் க்யூட் புகைப்படங்களை தற்போது ஷேர் செய்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக “உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆசீர்வதிக்கப் பட்டதாகவும் உணர்கிறேன்" என்றும் குழந்தையை பார்க்க காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மகத் தற்போது ‘காதல் Condition apply’ என்ற புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.அரவிந்த் இயக்கி வருகிறார். 

சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings