இன்று முதல் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !

0

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், 

இன்று முதல் கடும் நடவடிக்கை !
இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் லாக்டவுன் விதிகளை கடுமையாக்க வேண்டும் என்று, 

நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனால் விரைவில் லாக்டவுன் விதிகளை அதிகரிப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஏற்கனவே லாக்டவுன் கட்டுப்பாடுகள் இன்று மாலையோடு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. 

இன்று முதல் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !

சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன் தீப் சிங் பேடி உத்தரவின் பெயரில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடிய கொரோனா தொற்று நோயைக் கட்டுபடுத்துவதற்கு 10.05.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்தது. 

பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் கொரோனா பரவாமல் இருக்க முக கவசம் அணிவது, 

கிரிமி நாசினி கொண்டு கைளைக் கழுவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

இன்று முதல் முழு ஊரடங்கு
10.05.2021 முதல் நேற்று வரை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் கடந்த நான்கு நாட்களாக ஒலிபெருக்கி மற்றும் 

துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்கள் மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர். 

ஆனால் சாலைகளில் சாரை சாரையாக அணி வகுத்துச் செல்லும் வாகனங்கள், கடைவீதிகளில் அலை மோதும் கூட்டம். தமிழகத்தின் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் தென்படும் காட்சிகள் தான் இவை. 

இவற்றைப் பார்த்தால் தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமலில் உள்ளதா என்ற கேள்வி எவர் மனதிலும் எழுவது இயல்பானதே.

ஆக்சிஜன் தாகத்தோடு தவிக்கும் நோயாளிகள், அவசர சிகிச்சை படுக்கைக்காக போராடும் உறவினர்கள், இரவு பகல் இடைவெளியின்றி இயங்கும் இடுகாடுகள் என சூழல் இருக்கையில், 

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !

மறுபுறம் இது போன்ற காட்சிகள் சர்வசாதாரணமாக தென்படுவது மக்களுக்கு சூழ்நிலையின் தீவிரம் புரியவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிகின்றனர். கடந்த ஆண்டு முழு பொது முடக்கத்தின் போது வெறிச்சோடி காணப்பட்ட சென்னை, 

தற்போது வழக்கமான நாட்களைப் போல காட்சியளிக்கிறது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதே அதற்கு உதாரணம். 

இவ்வறிவுரைகளைப் பொதுமக்கள் ஒரு சிலர் சரியாகவும் ஒழுங்காகவும் பின்பற்றாததால் கொடிய தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இன்று முதல் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !
இன்று (14.05.2021) முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. 

தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி, கொரோனா தீவிரமாக பரவி வரும் இக்காலக் கட்டத்தில் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளுக்கு., 

உட்படுத்தப் படுவதிலிருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்து கொள்ளும்படி தமிழ்நாடு காவல்துறை கேட்டுக் கொள்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)