மத்திய அரசு 7வது சம்பள கமிஷன் தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் உயர்வு !

0

7 வது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்புக்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் வேளையில், 

7வது சம்பள கமிஷன் - 7th pay commission
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ரயில்வே, சுரங்கம், துறைமுகம் மற்றும் 

இதர துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் மத்திய அரசின் கீழ் இருக்கும் 1.5 கோடி தொழிலாளர்கள் சற்றுக் கூடுதலான சம்பளத்தைப் பெற உள்ளனர். 

சொல்லப் போனால் தற்போது அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் பழைய அளவீட்டை விடவும் சுமார் 100% அதிகமாகும்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ள அறிவிப்பின் படி ரயில்வே, சுரங்கம், துறைமுகம் மற்றும் 

மத்திய அரசு 7வது சம்பள கமிஷன் தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் உயர்வு !

இதர துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் மாறுபடுகிற கிராக்கிப்படி அதாவது variable dearness allowance அளவீட்டை ஒரு நாளுக்கு 105 ரூபாயில் இருந்து 210 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. 

இது கிட்டதட்ட 100 சதவீதம் அதிகமாகும். இப்புதிய மாற்றத்தை ஏப்ரல் 1, 2021 முதல் அமலாக்கம் செய்யப்பட்டும் காரணத்தால், 

மத்திய அரசின் கீழ் இருக்கும் இத்துறை சார்ந்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தின் அளவு அதிகரிக்கும். 

மேலும் மாறுபடுகிற கிராக்கிப்படி அதிகரிப்பின் மூலம் 1.5 கோடி தொழிலாளர்கள் பலன் அடைய உள்ளார்கள்.

இந்த உயர்வின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தில் மாதம் 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையில் உயரும். 

உதாரணமாகத் தற்போது சுரங்க துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் (Unskilled worker) ஒரு நாளுக்கு 431 ரூபாய் பெறும் நிலையில், 

தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் உயர்வு !

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள உயர்வின் படி ஒரு நாளுக்கு 539 ரூபாய் பெற உள்ளனர்.

இதேபோல் விவசாய துறை, கட்டுமானம், துப்புரவுப் பணியாளர்கள், சுமை தூக்குவோர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும் இந்தப் புதிய சம்பள உயர்வு பொருந்தும் என்பதால் அனைவரும் பலன் அடைய உள்ளனர். 

மேலும் இந்த ஊதிய உயர்வின் அளவு தொழிலாளர் பணி செய்யும் ஊர் மற்றும் துறை சார்ந்து மாறுபடும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதன் மூலம் 1.5 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவது மட்டும் அல்லாமல் கொரோனா காலத்தில் இந்த ஊதிய உயர்வு பெரிய அளவில் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு இந்த ஊதிய உயர்வை தொழிற்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் கணக்கிட்டு உயர்த்தப்பட்டு உள்ளது எனத் தொழிலாளர்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசு 7வது சம்பள கமிஷன் தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் உயர்வு !

இதோடு இந்த ஊதிய உயர்வு நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டும் அல்லாமல் ஒப்பந்த ஊழியர்கள், பிற தரப்பு ஊழியர்களுக்கும் பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறுகையில் தொழிலாளர்களின் மாறுபடுகிற கிராக்கிப்படி 

அதாவது variable dearness allowance அளவீட்டை ஒரு நாளுக்கு 105 ரூபாயில் இருந்து 210 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings