சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முடங்க காரணம் பெண் கேப்டன் Marwa !





சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முடங்க காரணம் பெண் கேப்டன் Marwa !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

சூயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. 

சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முடங்க காரணம் பெண் கேப்டன் Marwa !
163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது. இக்கால்வாய் வெட்டப் பட்டமையால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கு மிடையிலான கப்பல் போக்குவரத்து மிக இலகுவானது. 

அதன் முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டி யிருந்தது. ஓராண்டில் ஏறக்குறைய 15,000 கப்பல்கள் இக்கால்வாயைக் கடக்கின்றன. 

ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகிறது.  இந்தக் கால்வாய் எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையத்தால் (SCA) பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூயஸ் கால்வாயில் மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர் கிவன் கப்பல் தரை தட்டவும், அதனால் கப்பல் போக்குவரத்து முடங்கவும்,

எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டனான Marwa Elselehdar தான் காரணம் என அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. 

அந்த செய்தியை அறிந்து தான் அதிர்ந்து போனதாக அந்த பெண் கேப்டன் தெரிவித்துள்ளார். 'இது என் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என நான் கருதுகிறேன். 

ஏனெனில் நான் எனது பணியில் சிறந்து விளங்குவதாலும் இல்லை என்றால் நான் எகிப்து நாட்டை சேர்ந்தவர் என்பதாலும் இந்த பொய் குற்றச்சாட்டு என் மீது வைக்க பட்டிருக்கலாம்' என அவர் தெரிவித்துள்ளார்.

சூயஸ் கால்வாயில் கப்பலை நகர்த்துவது எப்படி?

மேலும் தங்களது சமூகத்தில் பெண்கள் குடும்பத்தினரை விட்டு நீண்ட தூரம் கடலில் பணியாற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். 

இருந்தாலும் நமது மனதுக்கு பிடித்த பணிகளை செய்யும் போது அதை கவனத்தில் கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கப்பல் மாலுமிகளாக 2 சதவிகித பெண்கள் தான் பணியாற்றுவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 

அவர்களில் ஒருவர் தான் 29 வயதான Marwa Elselehdar. சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் தரை தட்டிய போது அவர் 100 மைல் தொலைவுள்ள துறைமுக நகரமான அலெக்சாண்டிரியாவில் இருந்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)