கோல்கேட் டூத் பேஸ்டில் புற்றுநோய் அபாயம்.... டிரைக்ளோசன் ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

கோல்கேட் டூத் பேஸ்டில் புற்றுநோய் அபாயம்.... டிரைக்ளோசன் !

பற்கள், ஈறுகளின் ஆரோக்கியத்துக்காகத் தினமும் காலை, இரவு இரு வேளை பல் துலக்குகிறீர்கள்தானே? பற்பசை அல்லது பற்பொடி கொண்டு பல் துலக்குவீர்கள். 

கோல்கேட் டூத் பேஸ்டில் புற்றுநோய் அபாயம்....  டிரைக்ளோசன் !
ஆனால் உங்கள் தாத்தா, பாட்டியிடம் கேட்டுப் பார்த்தால், அவர்கள் சாம்பல், கரித்தூள், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றை வைத்துப் பல் துலக்கியதாகச் சொல்வார்கள். 

இந்தச் சாம்பலையும் கரித்தூளையும் வைத்துப் பல் துலக்கும் வழக்கம் சுமார் எழு ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. 

சமீபக் காலத்தில் தான் சாம்பலும் கரித்தூளும் தங்கள் செல்வாக்கை இழந்து, அந்த இடத்தைப் பற்பொடியும் பற்பசையும் பிடித்துக் கொண்டன.

குடிசைத் தொழில்

குடிசைத் தொழில்

குடிசைத் தொழிலாக இருந்த பற்பொடி, பற்பசைத் தயாரிப்பு, இன்று சர்வதேச வியாபாரமாக உருவெடுத்திருக்கிறது. நிறுவனங்களுக்கு ஏற்றவாறு 3 வகை ஃபுளோரைடுகளால் பற்பசைகள் தயாரிக்கப் படுகின்றன.

புற்று நோய்க்குக் காரணமான முக்கியமான ஒரு வேதிப் பொருளைத் தான் பல லட்சம் அமெரிக்கர்கள் தினசரி பயன்படுத்தி வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 

அதாவது கோல்கேட் டோட்டல் பற்பசையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்று என்று இந்த ஆய்வு கூறுகிறது.

பற்களில் ஏற்படும் ஈறு பாதிப்பை ஏற்படுத்தும் நோயைக் குணமாக்க கோல்கேட் பேஸ்ட்டில் டிரைக்ளோசன் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படுவதாக கோல்கேட் நிறுவனம் கூறுகிறது.

புற்று நோய்

புற்று நோய்

ஆனால் இந்த வேதிப் பொருள் புற்று நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. இந்த வேதிப் பொருள் பாதுகாப்பானது, 

பயன்படுத்தலாம் என்று கடந்த 1997 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவறுகள்

ஆனால் இந்த அனுமதிக்குப் பின்னர் சில தவறுகள் நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம்

அதாவது கோல்கேட் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த அனுமதியை உணவு மற்றும் மருந்துக் கழகம் கொடுத்துள்ளது. 

இதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு வழக்கறிஞர் வெளிக் கொணர்ந்துள்ளார்.

ஆட்சேபனை தெரிவிப்பு

ஆட்சேபனை தெரிவிப்பு

உண்மையில் கோல்கேட் நிறுவனம் கடந்த 1997 இல் இந்த வேதிப் பொருளை பயன்படுத்த அனுமதி கோரிய போது உணவு மற்றும் 

மருந்துக் கழகத்தில் இடம் பெற்றுள்ள பலரும் இது ஆபத்தானது என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். 

ஆனால் கோல்கேட் தாக்கல் செய்த ஆய்வறிக்கையிலோ, அதிக அளவில் இந்த வேதிப் பொருளை பயன்படுத்தினால் தான் ஆபத்து என்று வாதிடப்பட்டிருக்கிறது.

அபாயகரமான வேதிப்பொருள்

அபாயகரமான வேதிப்பொருள்

இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்விலுலும் டிரைக்ளோசன் அபயாகரமான ஒரு வேதிப் பொருள், புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வில் தகவல்

ஆய்வில் தகவல்

பற்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்தவே டிரைக்ளோசன் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் இது புற்றுநோயை ஏற்படுத்தும் முக்கிய வேதிப் பொருட்களில் ஒன்று என்று 2010 இல் நடந்த ஆய்விலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மலட்டுத்தன்மை

மேலும் இது மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவ தாகவும் 2013 இல் நடந்த ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

விளக்கம் அளிக்கும் கோல்கேட்

விளக்கம் அளிக்கும் கோல்கேட்

ஆனால் இது தொடர்பாக நடந்த சோதனைகள் அனைத்தும் விலங்குகள் மீது நடத்தப் பட்டவையாகும். 

ஆனால் நாங்கள் மனிதர்களிடம் சோதனை நடத்திய பிறகே இந்த வேதிப் பொருளை பயன்படுத்த முடிவு செய்தோம் என்று கோல்கேட் விளக்கம் அளிக்கிறது.

நிறுத்த இயலாது

மேலும் இந்த வேதிப் பொருளை நிறுத்துவது குறித்து எந்தத் திட்டமும் தங்களிடம் இல்லை என்றும் கோல்கேட் கூறியுள்ளது.

ஐரோப்பா தடை

ஐரோப்பா தடை

கடந்த 2010 ஆம் ஆண்டு உணவுப் பொருளில் டிரைக்ளோசனை சேர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது என்பது நினைவிருக்கலாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கரியால் பல் துலக்கி வந்ததை ஆரோக்கியம் குறைவு என்று பற்பொடிகளும் பற்பசைகளும் வந்தன. இன்று கரியும் உப்பும் நல்லது என்று பற்பசைகளில் சேர்த்து விட்டனர்.