இயக்குநர் ஷங்கர் இந்த நடிகைக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்காதது ஏன்?

0
ஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் பிறந்தது ஆகஸ்ட் 17, 1963. எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 
இயக்குநர் ஷங்கர் இந்த நடிகைக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்காதது ஏன்?
இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன.

திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

இவர் அந்த குறிப்பிட்ட நடிகைக்கு மட்டும் தன்னுடைய படங்களில் ஒரு சின்ன வாய்ப்பு கூட கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரக்காரணம் என்ன என கோலிவுட் வாசிகள் ஆராய ஆரம்பித்துள்ளனர்.

சங்கர் சினிமா துறைக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாகிறது. பலருக்கும் ஷங்கர் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 

அப்படி நீண்ட வருடமாக ஷங்கர் படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கிக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா. நடிகை திரிஷா கிருஷ்ணன் சென்னையில் மே 4, 1983 -ல் பிறந்தார். 

தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சினிமாவுக்கு வந்த பிரியா பவானி சங்கருக்கு கூட சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.

ஆனால் தமிழ் சினிமாவில் 17 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவுக்கு இதுவரை ஏன் சங்கர் வாய்ப்பு கொடுக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஷங்கர் இயக்கும் படங்களில் பெரும்பாலும் அவருடைய இணை இயக்குனர்கள் பல படங்களில் த்ரிஷாவை நாயகியாக போட்டால் சரியாக இருக்கும் என பல கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சிபாரிசு செய்துள்ளனர். 

ஆனால் திரிஷா என்றதுமே சங்கர் வேண்டாம் என்று கூறி விடுவாராம். தற்போது ஷங்கர் தமிழ் படங்களை இயக்குவதை கைவிட்டு விட்டு தெலுங்கு பாலிவுட் என கிளம்பி விட்டார். 

இதன் பிறகும் திரிஷாவுக்கு சங்கர் படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்பது எட்டா கனி போல தான் என்கிறார்கள். 
நடிகை திரிஷா கிருஷ்ணன்
த்ரிஷாவுக்கும் நாளுக்குநாள் வயதாகிக் கொண்டே செல்வதால் சங்கர் படங்களில் வாய்ப்பு கிடைப்பது அரிதுதான் என்கிறார்கள்.

அப்படியே கிடைத்தாலும் இன்னும் சில வருடங்கள் கழித்து ஏதாவது முத்தின கதாபாத்திரம் தான் கொடுப்பார் என்கிறார்கள். 

இருவருக்குள்ளும் அப்படியென்ன பஞ்சாயத்து இருக்கிறது என தெரியாமல் புலம்புகிறார்கள் கோலிவுட் வாசிகள். இதனை கண்டுபிடிக்க நான்கு பேர் கொண்ட ஒரு குழு தற்போது தீவிரமாக விசாரணை செய்து வருகிறதாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings