தனது மகளை அறிமுகம் செய்து வைத்த கவர்ச்சி உச்ச நடிகை... !

0

தமிழை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஷகிலா மலையாள சினிமாவில் கவர்ச்சியில் உச்ச  நடிகையாக வலம் வந்தவர். இவர் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவிற்கு வந்தார்.

தனது மகளை அறிமுகம் செய்து வைத்த கவர்ச்சி உச்ச நடிகை... !
ஆனால், இவரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி இறுதியில் கவர்ச்சி நடிகையாகவே மாற்றி விட்டனர். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். 

நடிகை ஷகிலா தனது வாழ்வை தனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் ஒரு திருநங்கை பெண்ணை மகளாக வளர்த்து வருகிறார் என்பது சமீபத்தில் தான் தெரிய வந்துள்ளது. 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதே போல் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் கிடைத்திருக்கின்றன. 

முக்கியமாக ஷகிலாவை பற்றி சொல்லலாம். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருந்த அபிப்பிராயமும், தற்போது வைத்திருக்கும் அபிப்பிராயத்திற்கும் நூறு மடங்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. 

தற்போதைய தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. 

இந்நிலையில் அடிக்கடி நடிகை சகிலா பெண் ஒருவருடன் புகைப்படங்கள் வெளியிடுகிறார். ரசிகர்கள் சிலர் இவர் யாரென்று கேட்க ஷகிலா அதற்க்கு பதிலளித்துள்ளார். 

அவர் கூறும் பொழுது இது என்னுடைய மகள் மிளா. இவர் இல்லை யென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய நிறைய ஏற்றத் தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். 

தனது மகளை அறிமுகம் செய்து வைத்த கவர்ச்சி உச்ச நடிகை... !

அதே போல் அவருடைய ஏற்றத் தாழ்வுகளிலும் நான் துணையாக இருந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஷகிலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம் அனைவருக்கும் தெரியும். 

மேலும் மிளா ஒரு திருநங்கை ஆவார். சினிமா துறையில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தற்போது ஷகிலாவின் மகள் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஷகிலா உடன் சக போட்டியாளரான அஸ்வினுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)