நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விவசாயிகள்... !

0

பாஜக வேட்பாளருக்கு எதிராக நிர்வாண ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த அந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்வாணமாக வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு நேற்றே கடைசி நாள் என்பதால் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்தது. 

இதுவரை தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 5,000 திற்கு அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டி யிடுவதற்காக 

திருவண்ணாமலை பெரியார் சாலையில் இருந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 16 பேர் கொண்ட குழு வருகை புரிந்தது. 

அப்பொழுது எதிர்பாராத விதமாக வந்தவாசி தாலுகாவை சேர்ந்த சக்கரபாணி, கலசபாக்கம் தாலுகா மேல் சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 

ராஜேந்திரன் ஆகிய 2 விவசாயிகள் தங்களின் ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக சாலையில் நடந்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்காததால் காவல் துறையினர் கண்டித்து அங்கேயே அய்யாக்கண்ணு தலைமையில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காவல் துறையினர் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 15 விவசாயிகளை கைது செய்து திருவண்ணாமலை காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். 

காமசூத்ரா கூறும் இந்த முத்த வகைகள் உங்களின் வாழ்க்கையை மாற்றுமாம் தெரியுமா?

இது குறித்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு தெரிவிக்கையில், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று 

நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விவசாயிகள்... !

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் களம் இறங்கி யுள்ளோம். 

விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளின் சட்டை, வேட்டி, துண்டு, கோவணம் போன்றவற்றை உருவி விட்டதால் 

விவசாயிகள் அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்தோம் என்று தெரிவித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)