விமான சேவை இல்லாத நாடுகள் தெரியுமா? உங்களுக்கு... !

0

பெரும்பாலான பயணிகளுக்கு விமானப் பயணம் மிகவும் விருப்பமான போக்குவரத்து பயணம். 

விமான சேவை இல்லாத நாடுகள்
வேகம் மற்றும் தொலை தூர இணைப்புகள் காரணமாக விமான போக்குவரத்து மற்ற வகை போக்குவரத்தில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. 

விமான நிலையங்கள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடையாளங்களாக உள்ளன. 

ஏனெனில் விமான நிலையம் எங்கிருக்கிறதோ அந்த இடம் செல்வ செழிப்பானது என்று கூறலாம். விமான வசதி நகர்ப்புற வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. 

தற்போதைய காலங்களில், விமான நிலையம் இல்லாத ஒரு நாட்டைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது. 

எவ்வாறாயினும், இட நெருக்கடி மற்றும் இயற்கை சூழல் காரணமாக விமான நிலையம் இல்லாத ஐந்து நாடுகள் மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது.  

இவ்வைந்து இடங்களிலும் காலநிலை மற்றும் இடவசதி பற்றாக் குறையாலும் விமான சேவையை நிறுவ முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.  அவற்றை பற்றி இங்கே காண்போம்.

வாட்டிக்கன்

வாட்டிக்கன்

உலகின் மிகச் சிறியநாடான வாட்டிக்கன் 0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் இந்நாட்டிற்கு கடல்வழி பயணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மக்கள் பொடிநடையாகத் தான் நடக்க வேண்டும். 

இருப்பினும், வாட்டிக்கன் கிறித்துவர்களின் மத முக்கியத்துவம் மற்றும் சுற்றுலா தலமாக இருந்தாலும் கூட இங்கு விமான நிலையம் இல்லை. 

ஆகையினும் மக்கள் பக்கத்து நாடான சியாம்பினோ மற்றும் ஃபியமிசினோ விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள்.

அன்டோரா

அன்டோரா

மெனாக்கோவை விட பெரிய பரப்பளவு கொண்ட இந்நாடானது ஸ்பெயினுக்கும் பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ளது.

ஆனால்  பள்ளத்தாக்குகளிலிருந்து 3000 மீட்டர் தொலைவில் பல சிகரங்கள் இருப்பதால் உயரமான இடங்களில் விமானங்களை இயக்குவது கடினம் மற்றும் ஆபத்தானது, 

குறிப்பாக பனி மற்றும் மூடுபனி காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகி விடும். 

மேலும் இந்நாட்டு இணை அதிபரை சந்திப்பதற்கு மட்டும் சியோ டி உர்கெலுக்கு அருகிலுள்ள கட்டலோனியாவின் அன்டோரா-லா சியு விமான நிலையம் 30 கி.மீ தூரத்தில் உள்ளது.

சான் மரினோ

சான் மரினோ

உலகின் மிகப் பழமையான நாடாக கருதப்படும் சான் மரினோ வாட்டிக்கன் மற்றும் ரோம் நகருக்கு மிக அருகாமையில் உள்ளது. இந்நாடு முற்றிலும் இத்தாலியால் சூழப்பட்டுள்ளது. 

கடல் வழி பயணம் கூட இந்நாட்டிற்கு இல்லை. நாட்டின் சுற்றளவு பொறுத்தவரை வெறும் 40 கி.மீ க்கும் குறைவாகவே உள்ளதால் விமான நிலையம் அமைக்க இங்கு போதிய இடமில்லை. 

ஆனால் அதிர்ஷ்டவசமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் நாட்டில் உள்ள மக்கள் எளிதாக பயணிக்க மிக நெருக்கத்தில் மற்ற நாட்டு விமான நிலையங்கள் வெறும் 16 கி.மீ தூரத்தில் உள்ளது. 

சான் மரினோ சாலை வழியாக நாலாபுறமும் இணைக்கப் பட்டுள்ளது,  போலோக்னா, புளோரன்ஸ், பீசா மற்றும் வெனிஸ் விமான நிலையங்களுக்கு சான் மரினோ, நல்ல அணுகலைக் கொண்டுள்ளது. 

அவை அனைத்தும் அருகிலேயே உள்ளன, அவை பெரும்பாலும் உள்ளூர் வாசிகளாலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளாலும் பயன்படுத்தப் படுகின்றன.

லிச்சென்ஸ்டைன்

லிச்சென்ஸ்டைன்

இந்நாடு சுமார் 160 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் சில கிலோ மீட்டர் நீளத்திணையும் கொண்டுள்ளது. 

மேலும் 75 கிலோ மீட்டர் முழு சுற்றளவையும் கொண்டுள்ளதால் இந்நாட்டில் விமான சேவையை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நாட்டின் தனித்துவமான இடம் மற்றும் புவியியல் சூழல்களால், இங்கு விமான நிலையத்தை உருவாக்க முடியவில்லை. 

இருப்பினும் சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் சூரிச் விமான நிலையம் இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

மொனாக்கோ

மொனாக்கோ

இந்நாடு உலகின் பிற நாடுகளுடன் பிரெஞ்சு கடற்கரையின் வழியாக இயங்கும் ரயில் சேவை இணைக்கிறது. 

மேலும் இந்நாட்டின் மோசமான இடநெருக்கடி யாலும் 40,000 மக்கள் தொகையாலும் இங்கு விமான சேவையை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)