இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்தி !

0

நடிகர் ரஜினியால் அறிமுகம் செய்யப்பட்டவரு பாஜ அறிவுசார் பிரிவோட மாஜி தலைவர் அர்ஜூன மூர்த்தி.  இவர் 1960 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தார். 

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்தி
இவரது தந்தை ராமசாமி மிகப்பெரிய தொழிலதிபர். சுதந்திர போராட்ட வீரரான இவரது தந்தை போக்குவரத்து தொழில் தொடங்கி அதன் பின்னர் புதுக்கோட்டை நகராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர். 

அதே போல், அர்ஜூன மூர்த்தியும் தொழிலதிபராக இருந்து அரசியல் களத்திற்கு வந்தவர். இளநிலை வேதியியல், முதுநிலை சமூக அறிவியல் படிப்பை முடித்த அர்ஜூன மூர்த்தி அதன் பிறகு பேரி நிறுவனத்தில் பணியாற்றினார். 

அதனைத் தொடர்ந்து உணவு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்திவந்த அவர், பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கி பழகினார். 

தமிழகம் மட்டுமல்லாமல் டெல்லியில் உள்ள பாஜக நிர்வாகிகளுடனும் இவருக்கு அறிமுகம் கிடைத்தது. உணவு தயாரிப்பு நிறுவனத்துக்கு பிறகு தகவல் தொழில்நுட்ப துறையில் கால்பதித்தார். 

தகவல் தொழில்நுட்பத் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் அர்ஜூன மூர்த்தி. தொழில்நுட்பத் துறையில் அனுபவம் இருந்ததால் ,

பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பரிவர்த்தனை, பண மதிப்பிழப்பு ஆகிய திட்டங்களுக்கு ஆலோசகராக இருந்தார்.

இவர் இப்போது புதுசா அரசியல் கட்சி தொடங்கினாரு. அவரோட கட்சிக்கு இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்று பெயர் வைத்து கட்சியோட சின்னம், கொடியையும்  அறிமுகம் செய்தார். 

பிறகு நிருபர்களிடம் அவர் பேசியதாவது: வயதாக வயதாக எல்லாரும் காசிக்கு போவாங்க. ஆனா, நான் அரசியலுக்கு வந்துட்டேன். நான் பாஜவிலே இருந்து இருந்தா, பல பதவிகள் கிடைச்சிருக்கும். 

ஆனா, நான் ஆண்டவனோட கட்டளையை மீறல. ரஜினியோட பாதம் தொட்டு தனி கட்சி துவக்குறேன். இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியோட மானசீக தலைவரா ரஜினிகாந்த் இருப்பாரு. 

புற்றுநோய் கட்டி எப்படி உருவாகுது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க !

அதே நேரத்துல, கட்சி நிர்வாகத்துக்குன்னு தனியா ஒரு தலைவர் நியமிக்கப்படுவாரு. அதிகாரத்தை பரவலாக்கணும். அதுக்கு தமிழகத்துல 4 துணை முதல்வர் பதவி கொண்டு வருவேன். 

அண்ணாகிட்டேயிருந்து, எம்ஜிஆர் பிரிஞ்சு வந்த மாதிரி நான் ரஜினி கிட்டேயிருந்து, பிரிஞ்சு வந்திருக்கேன்.

ரஜினிகாந்த் தன்னோட ரசிகர்கள் எந்த கட்சியில வேணும்னாலும் சேர்ந்துக்கிலாம்னு சொல்லிட்டாரு. அதே சமயத்துல ரஜினி ரசிகர்கள் என்னை நம்பி வரலாம். இவ்வாறு அர்ஜுன மூர்த்தி சொல்லி இருக்காரு.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)