கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் மரணம் !

0

சுவிட்சர்லாந்தில் ஃபைசர் - பயோன் டெக் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியும் தற்போது பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் மரணம்
கொரோனா தடுப்பூசிகளை தற்போது பெரும்பாலான உலக நாடுகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டன. இதனால் கொரோனா பீதியில் இருந்து பொதுமக்கள் ஓரளவு விடுப்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. 

முன்னதாக கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்ற தகவலை ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. 

இந்நிலையில் அந்த தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொண்ட 16 பேர் கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரக் குழு தகவல் வெளியிட்டு உள்ளது. 

இந்தத் தகவலால் உலக நாடுகள் முழுக்க கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. சுவிட்சர்லாந்தில் இதுவரை 5 லட்சத்து 55 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் இதுவரை கொரோனா பாதிப்பு

மருத்துவமனையை நாடிய சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் இதுவரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

முன்னதாக கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த போது அதனால் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்ற தகவலை ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. 

இந்த நிலையில் இந்த தடுப்பூசியால் 16 பேர் அடுத்தடுத்து மரணமடைந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. 

சுவிஸ்மெடிக் என்று அழைக்கப்படும் மருத்துவ கண்காணிப்பு குழு குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.

இதுவரை 751,009 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொண்ட 364 பேருக்கு பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா தடுப்பூசி பக்க விளைவு

இவர்களில் கடுமையான பக்க விளைவுகளை எதிர் கொண்ட 16 பேர் மாறுபட்ட இடைவெளியில் மரணமடைந்துள்ளனர். அவர்களின் சராசரி வயது 86.‌

மட்டுமின்றி 95 பேர்களுக்கு கடுமையான பக்கவிளைவுகளும் பதிவாகியுள்ளது. 

மேலும் மரணமடைந்த 16 பேரும் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

அதே வேளை தடுப்பூசி தான் இவர்களின் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் சுவிஸ்மெடிக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)