கொரோனா உணர்த்தும் மோசமான அறிகுறி... அசால்டா இருக்காதீங்க !

கொரோனா தொற்று நோயை விரட்டுவதற்கு உலகெங்கிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
கொரோனா உணர்த்தும் மோசமான அறிகுறி... அசால்டா இருக்காதீங்க !

இருப்பினும் இந்த தொற்று நோய் பின்வாங்குவ தற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. 

நாளுக்கு நாள் கொரோனா வழக்குகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. அதோடு ஒவ்வொரு நாளும் கொரோனா குறித்த புதிய புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப் பட்டும் வருகின்றன.

அதோடு கொரோனா அடிக்கடி புதிய அறிகுறிகளுடன் விஞ்ஞானிகளை குழப்பி வருகிறது. 
ஆரம்ப காலத்தில் ஒரு சுவாச நோயாக கருதப்பட்ட இந்த தொற்றுநோய் காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற வற்றுடன் ஆரம்பமானது. 

பின் படிப்படியாக புதிய அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. சிலர் தசை வலி மற்றும் வயிற்றுப் போக்குடன் வந்தனர். 

குழந்தைகளுக்கு அழற்சி அறிகுறி களையும், நீல நிற கால் விரல்களையும் வெளிக்காட்டியது.

தற்போது மருத்துவர்களை குழப்பும் வகையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பல்வேறு வகையான தடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பரவலான சரும தடிப்புக்கள்
பரவலான சரும தடிப்புக்கள்
சரும அழற்சி குறித்து ஸ்பானிஷ் மருத்துவர்கள் 375 நோயாளிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். 

அதில் கொரோனா நோயாளி களுக்கு சருமத்தில் தடிப்புக்கள் ஏற்படுவதை கண்டறிந்து உறுதி செய்துள்ளனர். 

அதுவும் இந்த அறிகுறிகள் இளம் நோயாளி களுக்கே அதிகம் காணப்படுவ தாகவும், பல நாட்கள் நீடித்திருப்ப தாகவும் கண்டறிந்தனர். 

ஆராய்ச்சி யாளர்களின் கூற்றுப்படி, சில வைரஸ் தொற்றுக்களில் தடிப்புக்கள் பொதுவானவை. இதற்கு சின்னம்மை ஒரு சிறந்த உதாரணம். 
ஆனால், கொரோனாவால் ஏற்படும் தடிப்புக்கள் சற்று வேறுபட்டவை. இது மிகவும் விசித்திரமானது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்த ஆய்வில் கலந்து கொண்ட நோயாளிகள் சுவாச அறிகுறி களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்கள். 

இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு வகையான தடிப்புக்கள் குறித்து காண்போம்.

மாகுலோபபுல்ஸ்
மாகுலோபபுல்ஸ்

உங்கள் சருமத்தில் மிகவும் சிறிய, வீங்கிய மற்றும் சற்று தடித்து சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள். 

ஏனெனில் இது தான் மாகுலோபபுல்ஸ். இந்த தடிப்பு சுமார் 7 நாட்கள் நீடித்திருக்கும். 

பெரும்பாலும் இம்மாதிரியான சிவந்த தடிப்புக்கள் கொரோனா வின் தீவிரமான நிகழ்வுகளில் பொதுவாக கவனித்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொட்டால் எரிச்சலூட்டும் அரிப்பு
தொட்டால் எரிச்சலூட்டும் அரிப்பு
இந்த வகை தடிப்புக்கள் பிங்க் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும். இது பெரும்பாலும் அரிப்புக்களை உண்டாக்கும். 
இது போன்ற தடிப்புக்கள் கொரோனா நோயாளிகளின் உடலில் காணப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் கைகளிலும் இது காணப்படும்.

கோவிட் டோ (COVID toe)
கோவிட் டோ (COVID toe)

இந்த வகை அரிப்பு குழந்தைகளின் கால் விரல்களில் பொதுவாக காணப்படுகிறது. ஆனால் கைகளிலும் இது காணப்படலாம். இது பார்ப்பதற்கு உறைப்பனி கடித்தது போன்று தெரியும். 
பெரும்பாலும் இது இளம் நோயாளிகளிடம் காணப்படுகிறது. மற்றொரு விசித்திரம் என்ன வென்றால், இது நோய்த்தொற்றின் பிந்தைய கட்டங்களில் தோன்றி, சுமார் 12 நாட்கள் நீடித்திருக்கும்.

கொப்புளங்கள்
கொப்புளங்கள்
கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் கைகால்கள் மற்றும் உடற்பகுதியில் சிறு கொப்புளங்கள் தோன்றலாம். இந்த தடிப்புக்கள் அரிப்புக்களை உண்டாக்குபவை. 

பெரும்பாலும் நடுத்தர வயது நோயாளிகளிடம் இந்த அறிகுறியைக் காணக்கூடும். 

பொதுவாக இந்த தடிப்புக்கள் கொரோனாவின் மற்ற அறிகுறிகள் வெளிப்படும் முன்னே தோன்றும் மற்றும் சுமார் 10 நாட்கள் வரை நீடித்திருக்கும்.

நெக்ரோசிஸ் அரிப்பு
நெக்ரோசிஸ் அரிப்பு

இதை லிவெடோ/நெக்ரோசிஸ் அரிப்பு என்றும் அழைக்கலாம். இந்த நிலையானது சருமத்தில் கறைப்படிந்த தோற்றத்தை அளிக்கும். 

இது நெட் வடிவத்தில் காணப்படுவதோடு, சிவப்பு அல்லது நீல நிறத்தில் மாற்றமடையும். இது பொதுவாக மோசமான இரத்த ஓட்டத்தால் ஏற்படுவதாகும். 
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்படும் வயதான நோயாளிகளிடம் இது பொதுவாக காணப்படும்.
Tags:
Privacy and cookie settings