தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் ஏன்? முதல்வர் எடப்பாடி !

0

தமிழகத்தில், 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களை தேர்வு இல்லாமல் பாஸ் என்று அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதற்காக அவ்வாறு அறிவித்தார் என்பதையும் பேரவையில் விளக்கினார்.

தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் ஏன்?
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சட்டப் பேரவையில் மாணவர்கள் தேர்ச்சி குறித்து வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா நோய்த் தொற்று குறைந்ததை யடுத்து, ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின், துத்தநாகம் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

மாணவர்கள், இந்த கல்வி ஆண்டு முழுவதும் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று உள்ளனர்.

தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக கல்வி பயிலும் சிரமத்தை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலை, பெற்றோர்கள் கோரிக்கை, கல்வியாளர்கள் கருத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2020-21ம் கல்வி ஆண்டு 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமல் பாஸ் செய்யப்படுகிறார்கள்.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு நெறிமுறைகள் அரசால் விரிவாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விளக்கம் அளித்தார் முதல்வர்.
சூரிய ஒளி மின்சாரம்

பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கற்பித்தல் அறிவு மாணவர்களுக்கு அவசியம் வேண்டும் என்பதால் 

மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிக்கு ஒரு மாணவனை அனுப்புவதற்காக பேருந்து, ரயில், ஆட்டோ, வழிச்செலவு எனப் பயணச் செலவைக் கொடுப்பது 

பெற்றோருக்குக் கூடுதல் சிரமம். தேர்வைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் பள்ளி செல்வதற்காக செலவழிக்க மனம் வரும்,

ஆல் பாஸ் போடப்பட்டபின் மாணவருக்கும் பள்ளிக்குச் செல்ல இயல்பிலேயே மனம் வராது. பிள்ளைகள் பள்ளிக்குத் தான் போவார்களா என்கிற தயக்கம் இருக்கும் என பெற்றோர்கள் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.

இதனிடையே, முதல்வர் அறிவிப்புக்கு, வரவேற்பு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டும் வந்தபடி உள்ளன. மாணவர்கள், பெற்றோர்கள் வரவேற்கிறார்கள். 

பாப்கார்ன் பற்றி அறிந்து கொள்வோமா?

கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியாளர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings