பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள், பெரும்பாலான பாம்புகளின் எலும்புக்கூடு என்பது மண்டை ஓடு, முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகள் ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளது.
பாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு. எனவே பாம்புகளின் நுரையீரல்களில் வலதுபக்கம் மட்டுமே வேலை செய்கிறது.
ஆனால், அதே பாம்பு தாகத்தில் தவிக்கும் போது இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து பாம்புக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு நாளும் பல விலங்குகள் வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் இன்று இளைஞர் ஒருவர் பாம்புக்கு தண்ணீர் வார்க்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
பள்ளியிலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி !
வாழை மரங்கள் நிறைந்த பகுதியில் நஞ்சு கொண்ட பாம்பு ஒன்று தாகத்துடன் சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்த இளைஞர் ஒருவர் அருகே சென்று வாட்டர் கேனில் உள்ள தண்ணீரை அந்த பாம்புக்கு குடிக்க கொடுக்கிறார்.
அந்த பாம்புவும் அந்த இளைஞர் ஊற்றும் தண்ணீரை வாட்டர் கேனில் இருந்து அப்படியே குடிக்கிறது.
இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து அன்புடன் பாம்புக்கு தண்ணீர் வார்க்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்கிற இதே நாட்டில்தான் பெண்கள் பாம்புக்கு பால் வார்க்கிறார்கள்.
சேமியா இறால் பிரியாணி செய்முறை !
அந்த வரிசையில் இந்த இளைஞர் தாகத்தில் தவிக்கும் பாம்புக்கு தண்ணீர் வார்ப்பதையும் பாருங்கள். இளைஞர் பாம்புக்கு தண்ணீர் தருவதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
Love & water...
— Susanta Nanda IFS (@susantananda3) February 16, 2021
Two best ingredients of life pic.twitter.com/dy3qB40m6N


Thanks for Your Comments