அடுத்த 3 நாட்களுக்கு மழை.. வானிலை ஆய்வு மையம் ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அடுத்த 3 நாட்களுக்கு மழை.. வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சூழ்ச்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு மழை
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, 

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

21.2.2021 மற்றும் 22.2.2021 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 

லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

23.2.2021 : தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

கால்மேல் கால்போட்டு உட்காரும் பெண்ணா நீங்கள்? இந்த பிரச்சனைகள் கண்டிப்பா வரும் !

நகரின் ஒரு சில பகுதிகளில் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.